சர்வதேச கடலோர தூய்மை தினம் – மெரினாவை சுத்தம் செய்த நடிகை

கடலில் ஏற்படும் மாசுக்களில் 80 விழுக்காடு நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதன் மூலம் அதனை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மனிதர்களின் அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகும்.

எனவே,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி சர்வதேச கடலோர தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா சார்பில் பிரமாண்ட தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இதில் 1500 பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சுமார் 5 டன் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் கலந்துகொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா அமைப்பின் அறங்காவலர் கே.கே.குமரனும் கலந்துகொண்டார். இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் பேசும்போது, ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலையில் தனது குடும்பம் மற்றும் ஓட்டுனருடன் மெரினாவில் தூய்மைப்பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

தற்போது நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மெரினாவில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா அமைப்பு சார்பில் சிறப்பு டி.ஷர்ட்கள் வழங்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.