மே மாதம் அதானி குழுமம் இந்தியாவின் இரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றுவதாக அறிவித்த நிலையில், இதன் பணிகள் தற்போது முழுமையாக முடிந்துள்ளது.
அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் கைப்பற்றலை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 22.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.
மேலும் அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகத்தைக் கௌதம் அதானியின் மூத்த மகனான கரன் அதானி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் புதிய முதலீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹீரோ எடுத்த முக்கிய முடிவு.. இனி ஓலா நிலைமை என்ன..?!
ஹோல்சிம் நிறுவனம்
அதானி குழுமம் ஹோல்சிம் நிறுவன பங்குகளைக் கைப்பற்றிய பிறகு, அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 63.15 சதவீத பங்குகளையும் மற்றும் ACC நிறுவனத்தில் 56.69 சதவீத பங்குகளையும் (இதில் 50.05% அம்புஜா சிமெண்ட்ஸ் மூலம் வைத்துள்ளது) வைத்துள்ளது.
20,000 கோடி ரூபாய்
இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிர்வாகக் குழு, அம்புஜா நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை வாரண்டுகள் மூலம் பெற ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய முதலீட்டின் மூலம் அம்புஜா சிமெண்ட்ஸ் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்
அதானி குடும்பத்தின் SPV நிறுவனமான எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மூலம், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் கைப்பற்றலை வெற்றிகரமாக முடித்துள்ளது.
அம்புஜா மற்றும் ஏசிசி
இந்தக் கைப்பற்றலில் அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரு நிறுவனத்தில் மிகப்பெரிய பங்கு முதலீட்டாளராக இருக்கும் ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாகக் கையகப்படுத்துவதுடன் மொத்த நிர்வாகமும் அதானி குழும கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
6.5 பில்லியன் டாலர்
இந்நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் ஹோல்சிம் பங்குகளைச் சுமார் 6.5 பில்லியன் டாலருக்கு ஒப்பன் ஆஃபரில் வாங்கியுள்ள வேளையில், இது கௌதம் அதானி-யின் மிகப்பெரிய கையகப்படுத்துதலாக உள்ளது.
மிகப்பெரிய கையகப்படுத்தல் திட்டம்
இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருட்கள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய கையகப்படுத்தும் திட்டமாகவும் இது உள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் அதானி குழுமத்தின் இன்பராஸ்டக்சர் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்பை கொண்டு உள்ளது.
Adani Group ready to invest 20000 crore in Ambuja Cements
Adani Group ready to invest 20000 crore newly acquired Ambuja Cements from holcim