தேநீர் விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கி உலகின் சக்தி வாய்ந்த தலைவராக உயர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த 10 முக்கியத் தகவல்கள் இதோ..
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் செப்டம்பர் 17, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.
2. எட்டு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட மோடி, பிறகு அந்த அமைப்பின் முழுநேர பிரச்சாரகராக மாறினார்.
3. ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவதற்கு முன்பு சிறிது காலம் தேநீர் விற்பனைக் கடையில் மோடி பணியாற்றினார். பின்னர், குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துக் கழக கேன்டீனிலும் சிறிது காலம் பணியாற்றினார்.
4. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் படிப்படியாக பல பொறுப்புகளை வகித்த மோடி, 1985இல் பாஜகவில் சேர்ந்தார்.
5. குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பும் அவருக்கு உண்டு. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்தார்.
6. இந்திரா காந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் (1975-77) நடைபெற்ற ஜனநாயக மீட்புப் போராட்டத்தில் பங்கேற்றார் மோடி. அப்போது, தலைமறைவாக இருந்துகொண்டே அவசர நிலை காலத்தில் நடந்த அத்துமீறல்களை விளக்கி குஜராத்தி மொழியில் புத்தகம் ஒன்றை எழுதினார்.
7. மோடி தீவிரமான சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். பாரம்பரியத்தை மிகவும் மதிப்பவர். ஆகையால் புகைபிடித்தல், குடிப்பழக்கம் உள்ளிட்ட எந்தத் தீய பழக்கங்களையும் தீண்டாதவர். யோகாசனங்கள் செய்வதில் நாட்டம் கொண்டவர்.
8. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை முன்னிறுத்தி, 1990-ம் ஆண்டு ரத யாத்திரை நடத்தியவர், அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக திகழ்ந்த எல்.கே. அத்வானி. அன்றைக்கு அந்த ரத யாத்திரையில் அத்வானியுடன் இருந்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.
9. இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் இரண்டாவது பிரதமராக நரேந்திர மோதி இருக்கிறார். இந்திரா காந்தி 1971ல் இதுபோல வெற்றி பெற்றார்.
10. கடந்த 2018-ம் ஆண்டு உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரதமர் மோடி இடம்பெற்றார்.
இதையும் படிக்க: அகமதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM