தமிழகம் மீது பிரதமருக்கு அதிக மதிப்பு: நிர்மலா சீதாராமன்| Dinamalar

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: தமிழகம் என்றாலே பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு. ஒக்கி புயலின் போது கடைசி மீனவர் உயிருடன் கரை திரும்பும் வரை மீட்பு பணி நடைபெற வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒக்கிப்புயலின் பொழுது பிரதமர் நரேந்திர மோடி என்னை தமிழகத்தின் கடைக்கோடி மற்றும் கேரள எல்லைக்கு அனுப்பியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படை இனனால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
அப்போதும் பிரதமர் நரேந்திர மோடி நீங்கள் நேரடியாக சென்று இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என எண்ணை அனுப்பினார் அந்த மீனவரின் உடலை பெற்றோர்கள் வாங்காமல் எங்களுக்கு நீதி வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் சென்று அந்த பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவித்த பிறகு அந்த இறந்து போன மீனவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் எனக்கு அறிவுறுத்தினார்.
இவரது பிறந்தநாளில் , நான் இறைவனிடம் வேண்டிக்கொள்வது பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பிரதமருடன் எனக்கு இரண்டு முக்கிய அனுபவம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மனிதாபிமானம் மிக்கவர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.