அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான கனிம பொருட்கள் கேரளாவிற்கு ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிரசர்களில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவிலான கனிம பொருட்களை இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் வள்ளியூர் மற்றும் பணகுடி நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு கனிம பொருட்களை ஏற்றி வந்த 10 லாரிகள் பிடித்து எடை போட்டு பார்த்தனர். அப்போது அதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 16 டன் முதல் 26 வரை அதிக எடை இருந்துள்ளது. இதனால் அந்த 10 லாரிகளையும் பறிமுதல் செய்து பணகுடி மற்றும் வள்ளியூர் காவல் நிலையங்களுக்கு கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM