கோடைக் காலத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைக் கண்ட மதுபான நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பொதுவாகப் பண்டிகை காலத்தில் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும், இப்போது மதுபானமும் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இப்பண்டிகை காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன.
தொற்றுநோய் குறைந்துள்ள நிலையில் கிட்டதட்ட 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும் முழுமையான பண்டிகை காலம் என்பதால் ஆடை, பட்டாசு, FMCG நிறுவனங்கள் முதல் மதுபானம் வரையில் பெரிய அளவிலான நம்பிக்கை உடன் இந்த வருடத் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா?
பண்டிகை காலம்
இந்தப் பண்டிகை கால விற்பனைக்காக இந்தியாவில் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் அதிக விற்பனையை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல மதுபான நிறுவனங்களும் காத்திருக்கிறது. இந்த வருடத் தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை அளவு புதிய சாதனை படைக்கவும் வாய்ப்பு உள்ளது.
மதுபான நிறுவனங்கள்
மதுபான நிறுவனங்கள் கடந்த இரண்டு வருட பண்டிகை காலத்தில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து அதிகளவிலான மதுபானத்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது .
Nao Spirits நிறுவனம்
ஜின் பிராண்டான Nao Spirits & Beverages கடந்த ஆண்டில் 53,000 பெட்டிகளை விற்பனை செய்த நிலையில், இந்த ஆண்டு இரண்டு மடங்கு விற்பனையை எதிர்பார்க்கிறது. இதேபோல் மிகப்பெரிய மதுபான நிறுவனமான டியாஜியோ இந்தியா-ஆதரவில் இயங்கி வரும் Nao Spirits மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அதிகப்படியான விற்பனையை எதிர்பார்க்கிறது.
மெடுசா பெவரேஜஸ்
பீர் தயாரிப்பாளரான மெடுசா பெவரேஜஸ் பிரைவேட் லிமிடெட், இரண்டு வருட முழுமையாக வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காகவும், குறிப்பாகப் பண்டிகை கால விற்பனைக்காக வட இந்தியாவில் மூன்று மதுபான ஆலைகளுடன் இணைந்துள்ளது உற்பத்தியை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
பகார்டி இந்தியா
பகார்டி இந்தியா & தென்கிழக்கு ஆசியாவின் நிர்வாக இயக்குநர் சஞ்சித் சிங் ரந்தாவா கூறுகையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, புதிய சில மதுபான வகைகளைத் திவார் பிராண்டில் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Liquor companies getting for biggest festive sales after 2 years
Liquor companies getting for biggest festive sales after 2 years