உக்ரைன் போரில் ரஷ்யா பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி வருகிறது.
ரஷ்யா போரில் சந்தித்த இழப்புகள், மற்றும் உக்ரைனின் சமீபத்திய வெற்றிகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, எதிர்பார்த்ததைவிட ரஷ்யாவிடம் இப்போது இராணுவ தளவாடங்கள் குறைவாகவே மீதம் இருக்கக்கூடும் என ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவம் இப்போது பெருமளவில் படைவீரர்களையும் ஆயுதங்களையும் இழந்துள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht, அதை கருத்தில் கொள்ளும்போது, ரஷ்யாவிடம் பெரும்படை உள்ளது என்று கூறப்படும் விடயம் உண்மையுடன் ஒத்துப்போகவில்லை என்று கூறியுள்ளார்.
உண்மையில் ரஷ்யாவிடம் இப்போது மீதமிருக்கும் இராணுவம் எவ்வளவு பெரியது என்பதைக் காண்பது சுவாரஸ்யமான விடயம்தான், சொல்லப்போனால், நாம்நினைத்ததைவிட இப்போது குறைவான தளவாடங்களே ரஷ்யாவிடம் இருக்கும் என்று நான் நினைக்கிறென் என்கிறார் அவர்.
ஆனாலும், நாம் அவசரப்பட்டு தப்புக் கணக்கு போட்டுவிடக்கூடாது என்று கூறும் Lambrecht, ரஷ்யா இன்னும் தோற்கடிக்கப்படவில்லை, அதன்வசம் இன்னமும் வெவ்வேறு இராணுவ திட்டங்கள் இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
image – economictimes