பலகை தொட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் செந்தில் குமார் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று 11மணி அளவில் தனது குடும்பத்தோடு வெளியே சென்று விட்டு தனது வீடு அருகே தனது காரை நிறுத்தும்போது குடிபோதையீல் வந்த 4இளைஞர்கள் தலைமை காவலரின் கார்மீது காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்
இதனை காவலர் தட்டி கேட்டபோது அவரை கல்லால் தாக்கிவிட்டு அவர்கள் தப்போடியியுள்ளனர் இதில் காயமடைந்த செந்தில் குமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து திருவொற்றியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய நால்வரை தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காவல் துறையினர் மீது தொடரும் இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.