பெரிய மனுஷன் பன்ற வேலையா இது.. எலான் மஸ்க் செயலால் டெஸ்லா ஊழியர்கள் கடுப்பு..!!

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஊழியர்களை எப்படி அலுவலகத்திற்கு அழைப்பது எனத் தெரியாமல் நிறுவனங்கள் ஒருபக்கம் குழம்பிக்கொண்டு இருந்த வேளையில், மறுபுறம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது என அடம்பிடிப்பது மட்டும் அல்லாமல் உறுதியாக நின்றனர்.

இந்த நிலையில் தான் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு டெஸ்லா ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க ஊழியர்களையும் அதிர வைத்தார். இந்நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க் செய்யும் வேலை அளவு கடந்து போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் சோகத்தில் மட்டும் அல்லாமல் கடுப்பில் உள்ளனர். அப்படி என்ன ஆனது தெரியுமா..?

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது ஊழியர்களை அனைவரையும் கட்டாயம் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கியுள்ள நிலையிலும் பலரும் பல்வேறு காரணத்தால் அலுவலகம் வாராமல் ஏமாற்றுவது அவரைக் கோபப்படுத்தி வருகிறது. இதில் பொறுமை இழந்த எலான் மஸ்க் இதைச் சரி செய்ய நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

 டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களில் யார் யார் தினமும் வருகிறார்கள், எத்தனை மணிநேரம் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்பதை அணி வாரியாகக் கண்காணித்து வருகிறார். இது டெஸ்லா ஊழியர்கள் மத்தியில் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம்
 

வொர்க் ப்ரம் ஹோம்

டெஸ்லா தனது ஊழியர்களை வொர்க் ப்ரம் ஹோம்-ல் இருந்து அலுவலகத்திற்கு அழைப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும், நிர்வாகம் நியமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எலான் மஸ்க் செய்து வரும் செயல் விநோதமாக உள்ளது.

3 மாத கால அவகாசம்

3 மாத கால அவகாசம்

டெஸ்லா நிர்வாகம் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வர 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், 3 மாதத்திற்குப் பின்பு அலுவலகம் வந்த ஊழியர்களுக்குப் போதுமான இட வசதி இல்லாமலும், அலுவலகத்தில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், நிர்வாகம் ஊழியர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

10 சதவீத ஊழியர்கள்

10 சதவீத ஊழியர்கள்

இதேவேளையில் டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீத ஊழியர்கள் முக்கியமான வேலைநாட்களில் அலுவலகம் வராதது எலான் மஸ்க்-ஐயும், டெஸ்லா நிர்வாகத்தையும் கோபப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் செய்வது சரியா தவறா..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk strict on Work from office policy; Checking employee list who not shown up to office

Elon Musk strict on Work from office policy; Checking employee list who not shown up to office

Story first published: Saturday, September 17, 2022, 21:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.