பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17-ம் தேதி தனது 72வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
பிரபலங்கள் பிறந்த நாள் விழாக்கள் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என கோலாகலமாக இருக்கும். இதுவே பிரதமர் மோடி தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடுகிறர்.
இதுவரையில் எப்படி எல்லாம் கொண்டாடி உள்ளார் என விளக்கமாகப் பார்க்கலாம்.
மோடி அரசின் ONDC திட்டத்தில் NPCI அமைப்பு முதலீடு.. 10% பங்குகள் விற்பனை..!
2014
2014-ம் ஆண்டு தனது 64வது பிறந்த நாளை சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் மற்றும் சபர்மதி ஆற்றங்கரையில் கொண்டாடினார்.
2015
2015-ம் ஆண்டு பிரதமர் மோடி சௌரியாஞ்சலியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற போர் குறித்த கண்காட்சியில் தனது நேரத்தைச் செலவிட்டார்.
2016
2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தனது பிறந்தநாள் அன்று குஜராத்தில் உள்ள நவசாரி சென்று, அங்கு இருந்த உடல் ஊனமுற்றோர்களுடன் நேரத்தைச் செலவிட்டார்.
2017
2017-ம் ஆண்டு தனது பிறந்த நாள் அன்று காந்திநகரில் தனது தாயிடம் ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் இந்தியாவின் மிகப் பெரிய அணையான சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டு அங்கு இருந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
2018
2018-ம் ஆண்டு தனது 68வது பிறந்தநாளைத் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரனாசியில் உள்ள பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடினார்.
2019
2019-ம் ஆண்டு தனது 69வது பிறந்தநாள் அன்று, இரும்பு மனிதர் என அழைக்கப்படும் பட்டேல் சிலை முன்பு பொது மக்களிடம் உரையாற்றினார்.
2020
2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்திலிருந்த காலம் என்பதால், விழா எதிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
2021
2021-ம் ஆண்டு ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் மெய் நிகர் காணொலி மூலம் உரையாற்றினார்.
2022
இந்த ஆண்டு தனது 72வது பிறந்த நாளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளைக் கூண்டிலிருந்து விடுவித்து உரையாற்றுகிறார்.
Narendra Modi Birthday: How He Celebrates Since He Becoming The PM
Narendra Modi Birthday: How He Celebrates Since He Becoming The PM