வாசல் வந்த காற்றை மறக்க முடியுமா? 22 ஆண்டுகளை கடந்த ரிதம் படம்!

சென்னை : நடிகர் அர்ஜுன், ஜோதிகா, மீனா இணைந்து நடித்து கடந்த 2000ல் வெளியான படம் ரிதம்.

தன்னுடைய வழக்கமான ஆக்ஷன்களில் இருந்து விலகி மென்மையான நடிப்பை வழங்கியதன்மூலம் இந்தப் படத்தில் அர்ஜுன் கவனம் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 22 ஆண்டுகளை கடந்துள்ளது. படம் குறித்து பேச எவ்வளவோ விஷயங்கள் உள்ளபோதிலும் சில விஷயங்களை தற்போது நினைவுகூறலாம்.

ரிதம் படம்

நடிகர் அர்ஜூன், ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ், லஷ்மி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான படம் ரிதம். இந்தப் படம் பெயருக்கேற்றாற் போலவே இந்தப் படம் அழகான காதலை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஏஆர் ரஹ்மானும் தன்னுடைய பங்கிற்கு படத்தின் பாடல்கள், பிஜிஎம் என கலக்கல் காம்பினேஷனில் ரசிகர்களை ஈர்த்தார்.

உணர்வுபூர்வமான கதைக்களம்

உணர்வுபூர்வமான கதைக்களம்

பிரமீட் பிலிம்ஸ் வி நடராஜன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் படம் வெளியானது. கணவனை இழந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் பெண் மற்றும் மனைவியை இழந்த இளைஞர் இருவரும் ஒருகட்டத்தில் இணையும்போது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்தப் படம் மிகவும் அழகாக வெளிப்படுத்தியது.

ரசிகர்கள் கவர்ந்த கேரக்டர்கள்

ரசிகர்கள் கவர்ந்த கேரக்டர்கள்

படம் அர்ஜூன் மற்றும் மீனா இருவரை சுற்றியே நகர்ந்தாலும் படத்தில் மீனாவின் மகனாக வரும் சிறுவன், ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, லஷ்மி, நாகேஷ் என இந்தப் படத்தின் சிறிய கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை பெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களையும் கவர்ந்தது.

சந்தர்ப்பத்தின் சதி

சந்தர்ப்பத்தின் சதி

முதல் வாழ்க்கையை இழந்த ஒரு ஆணும் பெண்ணும், தங்களை இணைத்துக் கொள்ள முயலும்போது, அதற்கு எதிராக சந்தர்ப்பம் எப்படி சதி செய்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதாக இந்தப் படத்தின் கதை நகரும். படத்தில் ஏஆர் ரஹ்மான் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்த போதிலும் அர்ஜூன் -ஜோதிகா டூயட் பாடலான காற்றே என் வாசல் வந்தாய்.. மெதுவாக கதவு திறந்தாய் பாடல் அன்றைய காலகட்டத்தில் மட்டுமில்லாமல் தற்போதும் ரசிகர்களின் பேவரிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் ஜோதிகா அவ்வளவு அழகு. இந்த வரிசையில் தீம்தனனா பாடலையும் சேர்க்கலாம்.

சிறப்பான நாயகிகள்

சிறப்பான நாயகிகள்

ஜோதிகாவை பார்த்து அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது என்று ரசிகர்கள் துள்ளிக் கொண்டே கூறிய நிலையில், திடீரென அவரது கேரக்டருக்கு எண்ட் கார்ட் போடப்பட்டிருக்கும். அதில் ரசிகர்களுக்கு குறைதான் என்றாலும், அந்த இடத்தை மீனா நிரப்பி அவர்களை ஆசுவாசப்படுத்தியிருப்பார்.

கணவனை இழந்த பெண்ணின் உணர்வு

கணவனை இழந்த பெண்ணின் உணர்வு

ரிதம் படத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் பரிதவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் மீனா. அந்த வகையில் அவரது நடிப்பிற்கு இந்தப் படத்தில் ஏராளமான ரசிகர்கள் கட்டுண்டனர். அதேபோல வழக்கமான ஆக்ஷன் காட்சிகளை கொடுக்காமல், ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனை அப்படியே தன்னுடைய கேரக்டரில் கொண்டு வந்திருந்தார் அர்ஜூன்.

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

படத்தின் பலம் சிறப்பான திரைக்கதை, அதை நியாயம் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள், சிறப்பான இசை, ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம், பாடல்கள், கேரக்டர் தேர்வு என இந்தப் படத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு பரிசளிக்கும் வகையில் படத்தை வெற்றிப் படமாக்கினர் ரசிகர்கள்.

ஃபீல் குட் படம்

ஃபீல் குட் படம்

ஒரு சில படங்கள், எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தையும், அர்த்தத்தையும் பார்வையாளனுக்கு கடத்தும். அந்த வகையில் இந்தப் படத்தையும் கண்டிப்பாக சேர்க்கலாம். படம் வெளியாகி 22 ஆண்டுகள் பூர்த்தியானதை படக்குழு சொல்வதால் மட்டுமே நம்ப முடிகிறது. மற்றபடி படம் இப்போது வந்ததுபோல உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.