சிட்னி: உலகின் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில், 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது. பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. மனித உடல்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள கோகோ அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மீன்களின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புதைபடிமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த அபூர்வமான இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன் மாதிரிகளை சுண்ணாம்புக் கற்களில் வைக்கப்பட்டு, பேராசிரியர் கேட் டிரினாஜ்ஸ்டிக் தலைமையிலான ஆய்வுக் குழு, எக்ஸ்ரே மற்றும் நியூட்ரான் கற்றைகளைப் பயன்படுத்தி அவற்றை ஸ்கேன் செய்தது என்று கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | சூரியனின் மேற்பரப்பா இது? வியக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்த சோலார் டெலஸ்கோப்
அவற்றுள் உள்ள மென்மையான திசுக்கள் பின்னர் முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட்டன. முதன்முறையாக, ஆர்த்ரோடைர் எனப்படும் அழிந்துபோன மீன்களில் சிக்கலான s-வடிவ இதயத்தின் 3D மாதிரியை ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வு, ‘ஜெர்னல் சயின்ஸ்’ என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
The oldest heart ever discovered has been found in W.A’s Kimberley region and is helping unlock the secrets of evolution. #7NEWS @jacquelinrobson https://t.co/iuw7S32NNQ pic.twitter.com/2wasgnpFlt
— 7NEWS Perth (@7NewsPerth) September 16, 2022
இந்த கண்டுபிடிப்பு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார் பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய அவரின் கருத்துப்படி, “20 ஆண்டுகளுக்கும் மேலாக புதைபடிவங்களை ஆய்வு செய்த ஒரு பழங்கால ஆராய்ச்சியாளர் என்ற முறையில், 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான மூதாதையரின் இதயம் கிடைத்தது ஆச்சரியம் தருகிறது.”
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE
இந்த கண்டுபிடிப்புகள், இதயத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஆய்வில் முக்கியமான மைல்கல் என்று சொல்லலாம். பரிணாமம் என்பது பெரும்பாலும் சிறிய படிகளின் வரிசையாக கருதப்படுகிறது, ஆனால் இந்த பழங்கால புதைபடிவங்கள் தாடையற்ற மற்றும் தாடை முதுகெலும்புகளுக்கு இடையே ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது என்று டிரினாஜ்ஸ்டிக் கூறுகிறார்.
“இந்த மீன்கள் உண்மையில் அவற்றின் இதயங்களை வாயிலும் செவுகளின் கீழும் கொண்டிருக்கின்றன, அதாவது இன்று சுறாக்களுக்கு இருப்பது போல…” என்று ஆய்வாளர் சொல்கிரார். இந்த கண்டுபிடிப்பு முதுகெலும்பு உடற்கூறியல் வரலாற்றில் முக்கியமான குறிப்புகளை வழங்கிய ஆராய்ச்சி இது என்று அவர் கூறுகிறார்.
“இந்த அம்சங்கள் ஆரம்பகால முதுகெலும்புகளில் மேம்பட்டவை, தலை மற்றும் கழுத்து பகுதி எவ்வாறு தாடைகளுக்கு இடமளிக்கத் தொடங்கியது என்பது தொடர்பான விவரங்களை வழங்குகிறது, இது நமது சொந்த உடல்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகும்” என்பதே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்களின் குழுவின் கருத்தாக இருக்கிறது.
மேலும் படிக்க | அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ