இந்தியாவில் முன்னணி இணைய னைய சேவை மற்றும் டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அடுத்த மாதம் தீபாவளி முதல் இந்த 5G இணைய சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இந்த சேவையை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யவுள்ளது. முக்கிய நகரங்களாக உள்ள டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது.
மற்ற நகரங்களுக்கு இந்த அதிவேக ஜியோ 5G சேவையை வரும் டிசம்பர் 2023 ஆம் ஆண்டிற்குள் வழங்கவுள்ளது. இதனை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி “ஒவ்வொரு நகரத்திற்கும், ஊரிற்கும், கிராமங்களுக்கும் வரும் டிசம்பர் 2023 ஆம் ஆண்டிற்குள் வழங்கப்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த 5G சேவை உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5G சேவையாக இருக்கும். இதனை அந்த நிறுவனம் ‘Stand Alone 5G’ என்று அழைக்கிறது. இதில் 4G சேவையை எப்போதும் அது பயன்படுத்தாது.
கடந்த சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4Gசேவையை விட 5G சேவையின் வேகம் 10 மடங்கு அதிகம் இருக்கும் என்று தெரிவித்தார்.
iphone 14 Sale: இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ், iWatch சீரிஸ் 8, SE விற்பனை ஆரம்பமானது!
5G சேவையை பெற என்ன செய்யவேண்டும்?
இந்த 5 G சேவையை நீங்கள் பெறவேண்டும் என்றால் முதலில் உங்களிடம் இருக்கவேண்டியது ஒரு 5G போன். இந்த 5G வசதி கொண்ட போன் இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த அதிவேக சேவையை பெறமுடியும்.
இந்த நகரத்தில் தற்போது உள்ள மக்கள் உங்களின் ஸ்மாட்போன் இந்த சேவையை பெறுவதற்கு தகுதியானதா என்பதை எப்படி அறிவது?
முதலில் உங்களின் ஸ்மார்ட்போன் உள்ளே இருக்கும் ‘Settings’ செல்லவும்.அதில் ‘Wi-Fi & Network’ ஆப்ஷனை அழுத்தவும்.அடுத்ததாக ‘SIM & Network’ அழுத்தவும்.உள்ளே சென்றதும் நீங்கள் பட்டியலில் உள்ள ‘Preferred network type’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
அதில் 2G/3G/4G/5G என்று இருக்கும். அங்கு 5G ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் நீங்கள் 5G சேவையை பயன்படுத்த தயார். உங்களின் போன் 5G ஆப்ஷன் கொண்டிருக்கவில்லை என்றால் நீங்கள் புதிய 5G சேவை உள்ள ஸ்மார்ட்போனை வாங்கினால் போதும். தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் இந்த 5G ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.
Jio recharge : 2 இன்1 சலுகையில் ஜியோவின் சிறந்த 600 ரூபாய்க்கு குறைவான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரீச்சார்ஜ்கள்
பட்ஜெட் ஓர் பிரச்னையாக இருந்தால் விரைவில்
Realme
மற்றும்
Lava
ஆகிய நிறுவனங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்