அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக கார்டு டோக்கனைசேஷன் முறை நடைமுறை படுத்தப்படவுள்ளது.
இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
வங்கித் துறையில் என்ன தான் வங்கிகள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும், ஆங்காங்கே பிரச்சனைகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றன.
கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!
தரவுகள் திருட்டு
குறிப்பாக வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் பயனர்களை பாதுகாக்க வங்கித் துறையில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஆன்லைன் மூலமாகவோ அல்லது யுபிஐ ஐடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வது மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மோகம் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன.
விவரங்களை சேமிக்க கூடாது?
இத்தகைய பிரச்சனைகளை தடுக்கத் தான் இந்திய ரிசர்வ் வங்கி கார்டு டோக்கனைசேஷன் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலோ அல்லது வேறு எங்கேனும் தங்களது கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்கிறார்கள் எனில், அவர்களின் விவரங்களையும், வங்கி சார்ந்த விவரங்களையும் ஷாப்பிங் தளங்கள் சேமிக்கின்றன. இது தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆக இந்த தவறுகளை களையத் தான் ரிசர்வ் வங்கி, எந்தவொரு தளமும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 30 கடைசி
மேலும் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்யவும் கூறியுள்ளது. இதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 30 கொடுக்கப்பட்டுள்ளது.
டோக்கனைஷேசன் என்றால் என்ன?
கார்டு டோக்கனைஷேசன் என்பது கார்டு வழங்குபவர் மற்றும் கார்டு நெட்வொர்க்கினை தவிர, பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு நபரும், நிறுவனமும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக அணுக முடியாது. இதனால் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் சேமிக்க முடியாது. மேலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தளங்களில் இருந்து டோக்கனை கோரும் போது, கார்டு வழங்குபவர்களின் ஒப்புதலுடன், கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும். இதனால் இது வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
டோகனைஸ் செய்ய வேண்டும்
ஆக செப்டம்பர் 30க்குள் ஷாப்பிங் தளங்கள் உள்ளிட்ட வணிக தரப்புகளிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் நீக்கப்படும் என்றும், முன்பு போல கார்டு எண்களை நேரடியாக அணுக முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடைமுறையில், ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது, கார்டு-டோக்கனைசேஷனுக்கான ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், கார்டு தரவை கைமுறையாக தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்.
ஓடிபி கொடுக்க வேண்டும்
வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைத் தரவை டோக்கனைஸ் செய்திருந்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அவர்கள் பரிவர்த்தனையை முடிக்க கார்டு டோக்கனைத் தொடர்ந்து சிவிவி மற்றும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது கார்டுதாரர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். இது ஆன்லைன் மோசடியாளர்களிடமிருந்து உங்கள் கார்டு தகவலை பாதுகாக்கும். இந்தச் சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
New rules for credit cards, debit cards from October 1
Important steps to be taken by September 30 for debit and credit cards/செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனர்களுக்கு பெரும் நிம்மதி!