அதிமுக சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தினமணி திரையரங்கம் பகுதியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் செல்லூர் ராஜூவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
“பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழகத்தில் பெண்களுக்கு சம உரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் சேலை கட்டிய சிங்க பெண்மணி ஜெயலலிதா.
எம்ஜிஆர் கட்சி தொடங்கமால் இருந்திருந்தால் அண்ணா இருந்தார் வரலாறு படைத்தார் என சாதனைகள் செய்தார் என தெரியாது. எம்ஜிஆர் திமுகவுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். திமுகவை வளர்த்தவர். திமுகவில் எம்ஜிஆர் சேர்ந்த பிறகு தான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்ஜிஆர் சுடப்பட்டதால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர்.
மதுரை TIDEL Park : எப்படி சாத்தியம்? – உதயகுமார் கேள்வி !
சாதாரண நபரான கலைஞரை தலைவராக கொண்டு வந்தது எம்ஜிஆர். தன்னை
தலைவராக்க வேண்டும் என எம்ஜிஆரின் வீட்டில் சந்தித்து பேசியவர் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்தவன் எனக்கூறி மக்களுக்காக உழைப்பேன் எனச்சொல்லி என்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கலைஞர் எம்ஜிஆரிடம் கூறினார்.
மலைப்பாம்பு போல எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு திமுகவினர் அப்படியே இருப்பார்கள். எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, தனியாக கட்சி தொடங்காமல், வளர்த்த கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. எம்ஜிஆர் கட்சி தொடங்கவில்லை. மக்கள் தான் கூடி அவருக்கு ஆதரவு அளித்தனர். அதன் பிறகு தான் அண்ணாவின் பெயரையும் படத்தையும் வைத்து கட்சியை தொடங்கினார். ஆனால், இன்றைக்கு நான் தான் தலைவர், முதலமைச்சர் என கூறுகிறார்கள்.
நான் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் இல்லையென்றால் மக்கள் கூட்டம் போய்விடும் என முதல்வரான எம்ஜிஆரை பேச வைத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. எம்ஜிஆர் போல மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர் இனி வரப்போவதில்லை.
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் நன்றாக போஸ் கொடுத்தார். குழந்தைக்கு ஊட்டுவது போல ஒரு தகப்பனாக ஒரு தாத்தாவாக என்ன செய்யனுமே செய்தார். ஆனால் கடைசியில் சாப்பாடு உள்ள தட்டில் பிஸ்லரி தண்ணீரில் கை கழுவி விட்டார். குழந்தையின் எச்சில் பட்டதால் கையை கழுவினார். பின்னால் சென்று வேறு எதை வைத்து கை கழுவினார் என தெரியவில்லை.
எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை கருணாநிதி கேலி கிண்டல் பேசினார்கள். பிள்ளைகளை சாப்பாட்டு பாத்திரத்தை எம்ஜிஆர் தூக்க வைத்து விட்டார் என கேலி பேசினார்கள்.எந்தக் கருணாநிதி கிண்டல் செய்தாரோ அதே கருணநிதி சத்துணவில் முட்டை தான் போட்டார். அந்த திட்டத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை.
எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைந்துவிட்டார். எதையோ எதையோ சொல்லி அதிமுக வருமா, ஆட்சி அமைக்குமா என்றெல்லாம் ஸ்டாலின் பேசினார். மக்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். உதயநிதி என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலை உயர்ந்துவிட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல், ஜல்லி கட்டுமான பொருட்கள் என எல்லாமே விலை கூடி விட்டது. மக்களை தேடி மருத்துவம் என கூறிவிட்டு எந்த மருத்துவரும் வீடி தேடி வரவில்லை. நீட் ரத்து எனக்கூறி இப்போதும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி பணக்காரர்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர்கள் இப்போது என்ன பிச்சையா எடுக்கிறார்கள். பொன்முடி, எ.வ.வேலு யார் என எங்களுக்கு தெரியும், ஸ்டாலின், அவர் குடும்பம் அந்த குடும்பத்தின் பின்னணி என்ன, இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது. ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.
அதிமுக குண்டுக்கே அஞ்சாத தலைவர் வழியிலும், நெஞ்சுரம் கொண்ட தலைவியின் வழிவந்த இயக்கத்தினர். உங்கள் அப்பா கலைஞர் காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் ஒரு நாளும் பயப்பட மாட்டோம். திமுக அரசு நடந்தால் வரி நின்றால் வரிசும்மா இருந்தலும் வரி போடுவார்கள்.
மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்ச குளிக்கிறார்கள். திமுக தேர்தல் வராது என நினைக்கின்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர்” இவ்வாறு கூறினார்.