அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூலை 11-ம்தேதி நடந்தது. அதேநேரத்தில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் பேரில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு சென்ற சிபிசிஐடி போலீஸார், விசாரணையைத் தொடங்கினர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள், வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.
புகார் அளித்த சி.வி.சண்முகத்திடம் வாக்குமூலம் பெறுவதற்காக, எம்ஆர்சி நகரில் உள்ளஅவரது அலுவலகத்துக்கு சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் நேற்று சென்றனர்.
போலீஸாரிடம் வாக்குமூலம்: அங்கிருந்த சி.வி.சண்முகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அது தொடர்பான முழுமையான தகவலைக் கேட்டறிந்து வாக்குமூலம் பெற்றனர்.
மோதல்குறித்தும், அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட தேச விவரங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக சி.வி.சண்முகம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அடுத்தகட்டமாக ஓபிஎஸ்ஆதரவாளர்களிடம் சிபிசிஐடிபோலீஸார் வாக்குமூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.