சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேர், சென்னைக்கு செல்வதற்காக, நள்ளிரவு 12 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரவிந்த் என்ற தனியார் ஆம்னி பேருந்து வந்தவுடன் அந்த பேருந்தை நிறுத்தி, பின்பகுதியில் லக்கேஜ் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்தில் இருந்து, ஆத்தூர் நோக்கி வந்த சரக்கு லாரி, பேருந்தின் பின்னால் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு ( வயது 65) அவரது மகன் ரவிக்குமார்( வயது 42), செந்தில்வேலன்( வயது 44) சுப்பிரமணி, மற்றும் ஆம்னி பேருந்தின் கிளீனர் தீபன் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
அமைச்சரின் வருகை; அவதியடைந்த வாகன ஓட்டிகள் !
விபத்தில் படுகாயம் அடைந்த திருநாவுகரசுவின் மனைவி விஜயா ( வயது 60) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மட்டும் சேலம் அரசு மருத்துவமனையில் திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.