இந்தியா தான் பெஸ்ட்… அன்னிய முதலீட்டாளர்களின் தரமான செயல்..!

அன்னிய போர்ட்போலியோ முதலீடானது இந்திய சந்தையில் நடப்பு மாதத்தில் நிகராக பார்க்கும்போது கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும் குறிப்பாக கடந்த சில தினங்களாகவே இந்திய ஈக்விட்டி சந்தையில் முதலீடானது வெளியேறி வருகின்றது.

தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகின்றது.

இதற்கிடையில் செப்டம்பர் 12 – 16 வரையிலான காலகட்டத்தில் வர்த்தக வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 2% மேலாக சரிவினைக் கண்டது.

வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?!

 அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள்

அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள்

எனினும் செப்டம்பர் 16 நிலவரப்படி, பங்கு சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் 12,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை செய்துள்ளனர். எனினும் வரும் வாரத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து முதலீடுகள் அதிகரிப்பு

தொடர்ந்து முதலீடுகள் அதிகரிப்பு

மொத்தத்தில் ஈக்விட்டி சந்தை, கடன் சந்தை, ஹைபிரிட் மார்கெட் என அனைத்தும் சேர்த்து, 12,904 கோடி ரூபாயாக முதலீடுகள் வந்துள்ளன.

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிபுணர், ஜூலையில் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரையில் தொடர்ந்து, இந்திய சந்தையில் இந்திய முதலீடுகள் வரத்தானது அதிகரித்துள்ளது. இது செப்டம்பரில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக வீழ்ச்சி
 

கடந்த சில தினங்களாக வீழ்ச்சி

எனினும் கடந்த சில தினங்களாகவே அன்னிய முதலீடுகள் எஃப் ஐ ஐக்களாக மாறியுள்ளது. அவர்கள் 3260 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இந்த திடீர் விற்பனையானது கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. கட்னத வெள்ளிக்கிழமையன்று 1093 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியினை கண்டிருந்தது. இது ரெசசன் அச்சத்தின் மத்தியில் கடும் வீழ்ச்சியினை கண்டிருந்தது.

முதல் 6 மாதங்கள்

முதல் 6 மாதங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீடானது நடப்பு ஆண்டில் இது பெரியளவில் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 51,204 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் அன்னிய போர்ட்போலியோ நிகர விற்பனை மற்றும் நிகர வரத்தானது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 2,17,358 கோடி ரூபாயினை வெளியேற்றியது. இது கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 50,203 கோடி ரூபாய் முதலீடானது அதிகளவில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை என்ன நிலவரம்?

தற்போது வரை என்ன நிலவரம்?

நடப்பு ஆண்டில் இதுவரையில் அன்னிய முதலீடுகள் (FPI) வெளியேற்றமானது, 1,49,081 கோடி ரூபாயானது வெளியேறியுள்ளது. இதே ஒட்டுமொத்த சந்தையில் 1,55,894 கோடி ரூபாயாக வெளியேறியுள்ளது.

இந்தியாவில் வரவிருக்கும் வாரத்தில் மீண்டும் முதலீடுகளை அதிகரிக்கும் முன்பு, யோசித்து பார்த்து முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

இது செடம்பர் 20 – 21ம் தேதிகளில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 75 அடிபப்டை புள்ளிகள் வட்டி அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனால் வரும் வாரத்தில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FPI investment has increased by over Rs 12,000 crore so far in September

FPI investment has increased by over Rs 12,000 crore so far in September/இந்தியா தான் பெஸ்ட்… அன்னிய முதலீட்டாளர்களின் தரமான செயல்..!

Story first published: Sunday, September 18, 2022, 19:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.