இந்திய சந்தையில் வீழ்ச்சி தொடருமா.. வரும் நாட்களில் கவனிக்க வேண்டியது என்ன?

வரவிருக்கும் நாட்களில் சந்தையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து கடந்த சில சந்தை அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வரவிருக்கும் நாட்களிலும் இந்த சரிவானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது நிச்சயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் கொடுத்த செம அப்டேட்.. இதை மட்டும் செய்யுங்க.. இந்த பிரச்சனையே இருக்காது?

செல்லிங் அழுத்தம் அதிகரிக்கலாம்

செல்லிங் அழுத்தம் அதிகரிக்கலாம்

இதன் காரணமாக மீண்டும் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற இது வழிவகுக்கலாம். இதனால் சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகரிக்கலாம். இது மீண்டும் சந்தையில் சரிவினைக் காண வழிவகுக்கலாம்.

அமெரிக்க மத்திய வங்கியின் முடிவினை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக மேற்கொண்டு சந்தையில் செல்லிங் அழுத்தம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் சரிவு

இந்த வட்டி அதிகரிப்பு நடவடிக்கையானது மீண்டும் அடுத்த நிதியாண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் இந்திய சந்தையானது சென்செக்ஸ் 1093.22 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 58,840.79 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 346.55 புள்ளிகள் குறைந்து, 1.94% சரிந்து, 17,530.85 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

பங்குகள் பலத்த சரிவு
 

பங்குகள் பலத்த சரிவு

நுகர்வோர் பொருட்கள், ஐடி மற்றிம் ஆட்டோ பங்குகள் மோசமான சரிவினைக் கண்டுள்ளன. டெக் ஜாம்பவான்கள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. சர்வதேச அளவிலான நிறுவனங்கள் 6,18,536.3 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

செப்டம்பர் 16 நிலவரப்படி, பி எஸ் இ-யில் உள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் 2,79,68,822.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சென்செக்ஸ் & நிஃப்டி சரிவு

சென்செக்ஸ் & நிஃப்டி சரிவு

செப்டம்பர் 12 – 16 தேதிகள் சென்செக்ஸ் 60,600 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டி 18000 புள்ளிகளையும் தாண்டலாம். குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக சரிவினைக் கண்டும், சந்தையில் அழுத்தமே காணப்படுகின்றது. குறிப்பாக இந்த வாரத்தில் சென்செக்ஸ் 1274 புள்ளிகள் சரிவினைக் கண்டும், நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்தும், இரு குறியீடுகளுமே 2% மேலாக சரிவினைக் கண்டும் காணப்படுகின்றன.

விற்பனை அதிகரிக்கலாம்

விற்பனை அதிகரிக்கலாம்

இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 79.78 ஆக முடிவடைந்துள்ளது. இது சந்தையில் அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனினும் வரவிருக்கும் நாட்களில் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Will the market continue to fall in the coming week? What are the things to look out for?

Will the market continue to fall in the coming week? What are the things to look out for?/இந்திய சந்தையில் வீழ்ச்சி தொடருமா.. வரும் நாட்களில் கவனிக்க வேண்டியது என்ன?

Story first published: Sunday, September 18, 2022, 20:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.