“ உதவி செய்பவர்களின் காலில் இனிமேல் நான் விழுவேன்!" – ராகவா லாரன்ஸ் உருக்கம்

தன் ரசிகர்களைச் சந்திக்க தன் தாயுடன் சென்று கொண்டிருந்தபோது முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். தான் வெகு நாட்களாக செய்ய வேண்டும் என நினைத்த செயலைச் செய்யப் போவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில்,

“உதவி பெறுபவர்கள் எப்போதும் உதவி செய்பவர்களின் காலில் விழுந்து அழுவது பற்றிய என்னுடைய கருத்து.

என்னுடைய வாழ்விலும் அத்தகைய சூழ்நிலைகளை நான் கடந்து வந்திருக்கின்றேன். ஒரு நாள் ஒரு தந்தை தாய் அவர்களின் குழந்தை என்னிடம் உதவி கேட்க வந்திருந்தனர். அவர்கள் திடீரென்று என்னுடைய காலில் விழுந்து அழத் தொடங்கினர், நான் தள்ளி சென்று விட்டேன். ஆனால், தனது பெற்றோர் அழுவதை பார்த்த அவர்களின் குழந்தையும் அழத் தொடங்கியது. அந்த குழந்தைக்கு பெற்றோர் எனது காலில் விழுவது பிடிக்கவில்லை. அதை எப்படி செல்வதென்றும் தெரியவில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் அப்பா ஹீரோவாக இருக்க வேண்டும் என விரும்புபவர். அப்படி இருக்க பணம் இல்லாத ஒரே காரணத்தால் அவர்கள் காலில் விழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை அது வலித்துக் கொண்டே இருக்கும்.

ராகவா லாரன்ஸ் அறிக்கை

Open heart surgery செய்யப்பட்ட ஒரு குழந்தையை என்னுடைய காலில் வைத்தார்கள், குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவார்கள் அந்த குழந்தையை காலில் வைப்பதை நினைக்கும் போது நம்மையே நாம் செருப்பால் அடித்து கொள்வது போல் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் கிராமங்களுக்கு சென்று பெரியவர்களுக்கு உதவி செய்யும் போது பெரியவர்கள் அதாவது அம்மா வயதில் இருப்பவர்களும் என் காலில் விழுவார்கள் அம்மா காலில் விழுவதை எப்படி எற்றுக் கொள்வது.

ஆனால் உண்மை என்னவென்றால் நாம் வெறும் பணம் தான் கொடுக்கிறோம். அவர்கள் தான் நமக்கு புண்ணியம் கொடுக்கின்றனர்.புண்ணியம் கொடுப்பவர்கள் எப்படி காலில் விழ முடியும் பணம் கொடுப்பதால் நாம் கடவுளாக முடியாது.

இந்நிலையை என் வாழ்வில் நிறுத்த நான் ஒரு முடிவு செய்துள்ளேன். இனிமேல் நான் உதவி செய்பவர்களின் காலில் நானே விழுந்து உதவி செய்ய போகிறேன், ஏனெனில் மாற்றம் என்னில் இருந்து தொடங்க வேண்டும். எனவே இதற்கு எனக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும்.” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.