"கஞ்சா போதை ஆசாமிகளின் அராஜகம் தாங்கமுடியல" – சாலைமறியலில் புலியூர் கண்டிகை கிராம மக்கள்!

திருநின்றவூர், பாக்கம் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் ஆராஜகம் செய்வதாகக் கூறி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி அடுத்த திருநின்றவூர், பாக்கம் அருகே உள்ளது புலியூர் கண்டிகை கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு திடீரென கஞ்சா போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அடிக்கடி வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, சாலையில் நடந்து செல்பவர்களை போதையில் தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அதேபோல் அங்குள்ள பெண்களிடம் அத்து மீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கிராமத்தின் கோவில் தர்மகத்தாவை தாக்கியுள்ளனர். இதில் தர்மகர்த்தா முரளி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
image
இதுகுறித்து வெங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் பெற மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பாக்கம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாக்கம் வழியாக வந்த அரசு பேருந்துகள் மற்றும் பயணிகள் அவதி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சாலையில் மரங்களை போட்டு முழுவதுமாக போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு காவல்துறையினர் சம்மந்தபட்டவரக்ள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
image
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் கஞ்சா போதை ஆசாமிகள் தொடர்ந்து தொல்லை தருவதாகவும், புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.