சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பான பல படங்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
இவரது மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 28, கோவா உள்ளிட்ட படங்களும் சிறப்பாக அமைந்தன.
இதனிடையே தற்போது நாக சைத்தன்யா, கிரீத்தி ஷெட்டி ஆகியோரை கொண்டு, புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
இயக்குநர் வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு மிகவும் கலகலப்பான மனிதர். இவருக்கென்று ஒரு கேங் கோலிவுட்டில் உள்ளது. இந்த கேங்குடன் இணைந்து சிறப்பான படங்களை இவர் கொடுத்துள்ளார். சென்னை 28 என்ற ஒரு படத்தை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை மையமாக வைத்து இவர் இயக்கியுள்ளார்.
கோவா படம்
நிதின் சத்யா, ஜெய், விஜயலட்சுமி, சிவா, பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் கோவா படம் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கோவாவின் அழகை மிகச்சிறப்பாக காட்டியிருந்தார் வெங்கட் பிரபு.
கோவா குறித்த அழகான பிம்பம்
இந்தப் படத்தை பார்த்தவர்கள் கோவா என்றால் இவ்வளவு அழகா என்று வியப்படைந்தனர். அந்த அளவிற்கு மிகவும் கொண்டாட்டத்திற்கு உரிய இடமாக கோவாவை காட்டியிருந்தார் வெங்கட் பிரபு. உயர்ந்த லட்சத்தியத்திற்காக கோவா செல்லும் நண்பர்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
ரசிகர்களிடம் திட்டு
இந்நிலையில் கோவா படத்தை பார்த்துவிட்டு அதிகமான ரசிகர்கள் தன்னை திட்டியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர் இதனை கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோவில்தான் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
கோவா படத்தை பார்த்து ஏமாற்றமடைந்த ராஜு
இதுகுறித்து பேசிய ராஜு, வெங்கட்பிரபுவின் படத்தை பார்த்து நம்பி தான் கோவாவிற்கு சென்றதாகவும் ஆனால், அங்கு இன்னும் கொஞ்ச நாளில் சாகப்போகும் வயதான பாட்டிகள்தான் கடற்கரையில் மல்லாக்க படுத்தபடி இருந்ததாகவும் தான் ஏமாற்றமடைந்து விரக்தியில் சென்னை திரும்பியதாகவும் தெரிவித்தார்.
மலேசியாவில் எடுக்கப்பட்ட பீச் காட்சிகள்
இதைக் கேட்டு சிரித்த வெங்கட் பிரபு, படத்தை சுவாரஸ்யமாக்க தாங்கள் அதுபோல எடுத்ததாகவும் அந்தக் காட்சிகள் கோவாவில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், மலேசியாவின் லங்காவியில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் கூறினார். அந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு இதுபோல நம்பி கோவாவிற்கு சென்ற பலர் தன்னை அசிங்கமாக திட்டிய சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.