சங்க விதிகளை மாற்ற எதிர்ப்பு : தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022 ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தலைவர் முரளி இராம நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி முத்துராமன், மன்சூர் அலிகான், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம் , எஸ்ஏ சந்திரசேகர், எர்ணாவூர் நாராயணன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சுமார் 300 தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது சங்கத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க விதிகளை திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எழுந்த தீர்மானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை எனவும் தலைவர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்திருக்க வேண்டுமெனவும் திருத்தம் மேற்கொள்ள ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் ஆவேசமாக கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.வி உதயகுமார் : ‛‛செயற்குழு உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. சங்க விதிகளில் மாற்றம் என்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என பாதி பேர் போய்விட்டார்கள். ஏற்கனவே சங்கம் மூன்றாக உடைந்துள்ளது. விதி மாற்றங்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.