சீனாவுக்குள் அருணாச்சல், பாகிஸ்தானுக்குள் ஜம்மு-காஷ்மீர்! சீன அரசு டிவி வெளியிட்ட சர்ச்சை “மேப்”

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கை சீனா எல்லைக்குள்ளும், ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயும் வைத்து சீன அரசு தொலைக்காட்சியான CCTN வெளியிட்டு இருக்கும் ஆசிய கண்டத்தின் வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தானும், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அண்டை நாடான சீனாவும் உரிமைகோரி வருகின்றன. இதனால் இந்தியாவுடன் இருநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்தியா – சீனா மோதல்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கைலாஷ் பகுதியில் சீனாவின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படைகள் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் பகுதியில் சில இடங்களும் கிடைத்தன. அதன் பின்னர் இருநாட்டு படைகளை மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது.

சீனா அத்துமீறல்

சீனா அத்துமீறல்

இந்த நிலையில் லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் சீனா வேகமாக நகரத்தை உருவாக்கி வருகிறது. ஹாட் ஸ்ப்ரிங் அருகே பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் எல்லைக்கு உட்பட்ட ருடோக் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள அந்நாட்டு படைகளின் முகாமுக்கு அருகே இப்பகுதி இருக்கிறது.

 செயற்கைக்கோள் படங்கள்

செயற்கைக்கோள் படங்கள்

மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களையும் சீனா அமைத்து இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்தது. அத்துடன் 15 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழி பாலம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. அங்கு குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பேன்காங் ஏரியில் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கருவிகள் போன்றவை குவிக்கப்பட்டு இருப்பதையும் செயற்கைகோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.

இந்தியா விளக்கம்

இந்தியா விளக்கம்

“செயற்கைக்கோள் புகைப்படத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் பாலம் அமைந்து இருக்கும் பகுதியை கடந்த 60 ஆண்டுகளாக சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இத்தகையை சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்து உள்ளது.

சீனா அரசு டிவி

சீனா அரசு டிவி

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாடு தொடர்பாக சீன அரசால் நடத்தப்பட்டு வரும் CGTN என்ற தொலைக்காட்சி ஆசிய வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கை சீனா எல்லைக்குள்ளும், ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயும் இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.