'திமுக செய்த ரூ.1000 கோடி ஊழல்' – சி.வி.சண்முகம் விடுத்த வார்னிங்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். இதில், சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் சி.வி.சண்முகம் பேசியதாவது:

“அதிமுக செயல்படவில்லை முடங்கிவிட்டது என பலரும் கூறி வருகின்றனர், ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும்

ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசம்.

தமிழகத்தில் அடுத்து உயரப் போகும் கட்டணம் பேருந்து கட்டணம் ஆகும். உயர்வது மட்டும் இல்லை அதை தனியார் மையம் ஆக்குவதற்கு திமுக அரசு பாடுபட்டுக் கொண்டுள்ளது. மின்சார கட்டணம் உயர்வும் தற்போது நடைபெற்றது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் 6% மின்சார கட்டணம் உயரும் என தெரிவித்தார்.

பொங்கல் பரிசில் கொடுக்கப்பட்ட வெள்ளம் அதைப்போன்று அமெரிக்காவில் கூட கண்டுபிடித்தது இல்லை. அவ்வாறு வழங்கபட்ட பொங்கல் பரிசில் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து செய்த முதல் ஊழல் அதுதான் அதை கண்டித்து அதிமுக அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் திமுக அரசை என்று பிடிக்க வேண்டுமோ அன்று அதிமுக அரசு பிடிக்கும் என தெரிவித்தார்.

அடுத்தபடியாக திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் பிரதான சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது இந்த சாலை விரிவாக்க பணிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தாமலேயே சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதுதான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார்.

குடும்பம் குடும்பமாக கொள்ளையடிப்பது தான் திராவிட மாடலா? ஒப்பந்ததாரராக இருந்தவரையேல்லாம் அமைச்சராக போட்டால் இப்படித்தான் நடக்கும், ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவரது வீட்டு திருமண நிகழ்ச்சியில் 5000 ஆடுகள், கோழிகள் பிரமாண்டமான மேடை என திருமணத்தை அவ்வளவு பிரமாண்டமாக நடத்தியுள்ளார். அதில் மொய் எழுதுவதற்கு கார்டு சுவிப் செய்யும் மிஷின் 100 வைத்து 30 கோடி ரூபாய் மொய் வாங்கி உள்ளார். பத்திர பதிவுத்துறை அமைச்சராக நானும் மூன்று முறை இருந்துள்ளேன் ஆனால் அந்தத் துறையில் இவ்வளவு கொள்ளை அடிப்பர்களா என்று இவரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒன்றை கூறிக் கொள்கிறோம் ஆட்சிகள் மாறும் எனவே அனைவரிடமும் கண்ணியமாகவும் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுங்கள். ஆட்சி மாறினால் அனைவரும் பதில் கூற வேண்டிய காலம் வரும் அப்போது உங்களை திமுகவின் ஸ்டாலினோ, பொன்முடியோ காப்பாற்ற மாட்டார்கள் ஏனென்றால் அவர்களே சிறையில் தான் இருப்பார்கள்.

தமிழகத்தில் இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அதிகம் இயங்கி வருகிறது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இங்கு இருந்து தான் செல்கிறது, ஆனால் திமுக ஆட்சி அமைத்த உடன் இங்கு ஒருவர் கூட கல்குவாரி நடத்த முடிவதில்லை காரணம் மாதம் மாதம் லஞ்சம் கேட்கும் அமைச்சர்கள் மற்றும் அவரது கைக்கூலிகள், இப்போது நடைபெறும் அனைத்து கல்குவாரிகளும் பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோரது மட்டுமே ஆகும். அது மட்டுமே செயல்படும் ஏனென்றால் அது அமைச்சர்கள் குவாரி, தமிழகம் முழுவதும் கனிமம் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றுடன் இதுபோன்றுதான் நடைபெறும் இது மட்டுமில்லாமல் கொலை, கொள்ளை இவைகளும் சேர்ந்து நடைபெறும் இவற்றை கவனிக்க வேண்டிய டிஜிபி சைக்கிள் ஓட்டிக்கொண்டு உள்ளார். அவர் ஒருபுறம் சைக்கிள் ஓட்டுகிறார் என்றால் முதலமைச்சர் ஒருபுறம் சைக்கிள் ஓட்டுகிறார் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு காவலர்கள் போதவில்லை.பின்னர் எப்படி அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடிப்பது தண்டனை வாங்கி தருவது, வாக்களித்த மக்களுக்கு சிறந்த திட்டங்கள் கொடுப்பது திமுக அரசியல் இல்லை கொள்ளையடிப்பது என்பது மட்டுமே திமுக அரசின் நோக்கம்” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.