தேசிய மரநடுகை தினத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு

சமுர்த்தி திணைக்களத்தினால் “சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை” எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்ட மர நடுகை வாரம் இன்று 17.09.2022 திகதி தொடக்கம் 23.09.2022 திகதி வரை பிரகடனப்படுத்தி மரம் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான மரநடுகை நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் காயங்கேணி கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் தலைமையில் காயங்கேணி மீனவர் சங்க கட்டட வளாகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பபு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், சமுர்த்தி மாவட்ட தலைமையக முகாமையாளர் ஜே.எஸ்.மனோகிதராஜ், காயங்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம், வாகரை பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கே.கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.