தங்கம் (Gold) விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்த சரிவானது இந்த வாரமும் தொடருமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது தொடர்ந்து முக்கிய லெவலான 1700 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் நுகர்வோர் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வந்த நிலையில், செல் ஆஃப் தொடர்ந்து வருகின்றது.
தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?
பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்க விகிதம் 8.1% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்தது. இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவில் தங்கம் விலை
இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 1187 ரூபாய் குறைந்துள்ளது. இது 6 மாதத்தில் இல்லாதளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலையும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1684.50 டாலராக முடிவடைந்துள்ளது.
முக்கிய சப்போர்ட் லெவல்
வரும் வாரத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது 1684 டாலர் என்ற லெவலில் காணப்படுகிறது. இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 1610 டாலராகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மீடியம் டெர்மில் எப்படியிருக்கும்?
ஒரு வேளை தங்கம் விலையானது ஏற்றம் கண்டாலும், அவுன்ஸூக்கு 1710 டாலர்கள் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது 1640 – 1685 டாலர்களுக்குள்ளும், நீண்டகால நோக்கில் 1610 – 1710 டாலர்களுக்குள்ளும் வர்த்தகமாகலாம். இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 48,300 ரூபாயாகும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 49,700 ரூபாயாகவும், 50,200 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
முக்கிய காரணிகள்
வரவிருக்கும் வாரத்தில் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை, பணவீக்கம், ஃபெடரல் வங்கி கூட்டம் என பல முக்கிய காரணிகளும், தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold price dips ahead of US fed meeting: is it a right tom buy this level?
Gold price dips ahead of US fed meeting: is it a right tom buy this level?/தொடர் சரிவில் இருக்கும் தங்கம் விலை.. இன்று விலை எப்படியிருக்கு.. இனி எப்படி இருக்கு?