நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை.
காதல் தோல்வியால் உயிரை மாய்த்து கொள்கிறேன் என இறப்பதற்கு முன் எழுதிய கடிதம்.
இளம் தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள வீட்டில் 29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில் பொலிசார் விசாரணை நடத்தியபோது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அக்காதல் கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருக்கிறார்.
மேலும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார் என தெரியவந்துள்ளது.