பெண் தலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடுக்கு நாட்டு மக்கள் இன்னும் மனரீதியாக தயாராகவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பல காலமாக கிடப்பில் இருக்கிறது. புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரத்பவார் இதுபற்றிக் கூறும்போது, வட இந்தியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனநிலை இந்த விஷயத்தில் மாறுபட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தபோது மகளிர் இடஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் பேச்சை முடித்து திரும்பிப் பார்த்தபோது தனது கட்சி எம்.பி.க்களே வெளிநடப்பு செய்து கொண்டிருந்ததாகவும் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: `ஆட்சியை பார்த்துக்கொண்டு, கட்சியை விட்டுவிட்டனர்’- மகாராஷ்ட்ரா பற்றி அமைச்சர் துரைமுருகன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM