மாஜி காதலியை குத்தி கொன்ற வாலிபர்| Dinamalar

தேவனஹள்ளி : தன்னை காதலித்து ஏமாற்றி, வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், கோபமடைந்த வாலிபர், முன்னாள் காதலியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், அவதியில் வசிக்கும் சுப்ரமண்யா, 25, சவும்யா, 23, நாகரபாவியில் உள்ள ‘காபி டே’ வில் பணியாற்றினர்.

ஒரே இடத்தில் பணியாற்றிய இருவரும், சில ஆண்டுகளாக காதலித்தனர்.சில மாதங்களுக்கு முன், சவும்யா ‘காபி டே’ வில் பணியை விட்டு விட்டார். சுப்ரமண்யாவையும் விட்டு விலக ஆரம்பித்தார். இரண்டு வாரங்களுக்கு முன், வேறு இளைஞரை திருமணமும் செய்து கொண்டார். தன்னை ஏமாற்றியதால், சுப்ரமண்யா கோபமடைந்தார்.நேற்று முன் தினம், சவும்யா, அவதியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளதை அறிந்த சுப்ரமண்யா, இரவு அங்கு சென்றார். முன்னாள் காதலியுடன் வாக்குவாதம் செய்தார். கத்தியால் பல முறை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் அவர் உயிரிழந்தார்.காதலியை குத்திவிட்டு தப்பியோடிய சுப்ரமண்யா, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். தேவனஹள்ளியின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.விஜயபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.