ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார் திரௌபதி முர்மு

லண்டன்:
ந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

96-வது இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று முதல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப் பட்டுள்ளது. மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்களில் பங்கேற்க உலக தலைவர்கள் இங்கிலாந்து செல்கின்றனர். இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் பயணமானார்.

இந்நிலையில் லண்டன் சென்றடைந்த அவர், ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.