இன்றைய காலகட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. ஒன்று குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது. எனினும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வருமானமும் வரும் ஒரு பணியை செய்ய வேண்டும் என்பது பல தரப்பினரின் எண்ணமாக இருக்கும்.
குறிப்பாக சுயதொழில் செய்ய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? முதலீட்டுக்கு என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாகவே இருக்கும்.
10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்!
சாதித்து காட்டிய இளம் பெண்கள்
பொதுவாக பெண்களிடத்தில் செலவுகளை திட்டமிடுதல், சேமிப்பு ஆற்றல், பொறுமை, சகிப்பு தன்மை, விடாமுயற்சி போன்ற சிறந்த குணங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்த குணநலன்களே தொழில் வெற்றிக்கு பெரிதும் உதகிறது. இவற்றுடன் கல்வியும் சேர்ந்தால் அந்த திறன்கள் முழுமை பெறும். அப்படி தங்களின் விடா முயற்சியால் சாதித்து காட்டிய இரு இளம் பெண்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
SUTA தொடக்கம்
பொறியாளர்களாக சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சகோரிகளான சுஜாதா (36 வயது), தனியா (34 வயது) இருவரும் இணைந்து தொழில் செய்ய முடிவு செய்க்ன்றன. எனினும் அவர்களுக்கு பெரிதாக தொழில் பற்றிய அடிப்படை தெரியாது.
எனினும் அவர்கள் புடவைகளை பற்றிய தொழில் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அப்படி பல யோசனைகள், ஆராய்ச்சிகளுக்கு பிறகு இவர்களின் பெயர்களின் முதல் எழுத்துகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் “SUTA”
எவ்வளவு முதலீடு?
ஆரம்பத்தில் ஆளுக்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, மொத்தம் 6 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஜளிவு துறையில் காலடி எடுத்து வைக்கின்றனர். இதில் பாரம்பரிய நெசவு புடவைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டு வணிகத்தினை தொடங்குகின்றனர். இதன் மூலம் நெசவாளர்களுக்கும் ஒரு பயன், மக்களுக்கும் இதன் மீதான ஆர்வம் என்பது அதிகம் என திட்டமிடுகின்றனர்.
புடவைகளின் மீது ஆர்வம்
இது குறித்து சகோதரரிகள் BT அளித்த பேட்டியில் எங்களுக்கு தொழில் பற்றிய போதிய அனுபவம் கிடையாது. ஆனால் புடவைகளின் மீது பெரும் ஆர்வம் உண்டு. இந்தியாவின் ஜவுளி வியாபாரத்திற்கு என்று என்றுமே ஒரு பாரம்பரியம் உண்டு. ஆக நாங்கள் இந்த வணிகத்தினை தொடங்குவதில் எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. இதற்காக பெங்கால், ஓரிசா கிராமங்களுக்கு சென்றோம். அங்கு நெசவாளர்களை நேரடியாக சென்று சந்தித்தோம். அங்கிருந்து தான் எங்களது சிறிய அளவிலான வணிகம் ஆரம்பித்ததோம்.
ரூ.50 கோடி டர்ன் ஓவர்
இன்று 50 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி வருகின்றோம். தொற்று நோய் காலத்தில் தொழில் முனைவோர் பலரும் ஆன்லைனை நோக்கி ஓடினர். ஆனால் என்ன தான் ஆன்லைன் வணிகம் என இருந்தாலும், மக்கள் பார்த்து வாங்குவதில் உள்ள அனுபவம் வேறு எதிலும் இருக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
பிசிகல் ஷாப்
பெங்களூரில் எங்களிடம் வலுவான வாடிக்கையாளர் தளமும் வலுவாக உள்ள நிலையில், அங்கு கடையை தொடங்க விரும்புகிறோம். ஏற்கனவே கொல்கத்தாவில் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். எங்களது கடையை தொடங்கும் முன்பு இருப்பை உறுதிபடுத்திக் கொள்ள விரும்புகிறோம் என சுஜாதா கூறுகின்றார்.
ஆண்கள் & குழந்தைகள்
தற்போது தங்களது ஆடைகளில் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் என பலவற்றை அறிமுகப்படுத்த விரும்புகின்றனர்.
தங்களது கடைகளில் விற்பனை செய்யப்படும் புடவைகளின் விலை பொதுவாக 2500 – 3500 ரூபாய் என்ற லெவலில் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கல்லூரி செல்லும் பெண்கள், மாணவர்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் என பலரும் விரும்பி அணியும் ஆடைகளில் புடவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கைத்தறி புடவைகள் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளது.
புதிய கடை ஆரம்பிக்கிறீர்களா?
புதியதாக ஜவுளி கடை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு முதலில் சந்தையை பரிசோதித்து பார்க்கவும். கடைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு செலவுகளை குறைக்க திட்டமிடலாம். குறிப்பாக உங்களது பிராண்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறுகின்றனர்.
அக்கா, தங்கையாக எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் இருந்தாலும், ஒரு வணிகம் என வரும் போது நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம் என சகோதரிகள் இருவரும் கூறுகின்றனர்.
These 2 engineer sisters turned Rs.6 lakh investment in to Rs.50 crore revenue
These 2 engineer sisters turned Rs.6 lakh investment in to Rs.50 crore revenue/ரூ.6 லட்சம் முதலீடு.. 50 கோடி டர்ன் ஓவர்… சாதித்த பொறியாளர்கள்.. என்ன வணிகம்.. எப்படி?