நீரிழிவு நோயாளிகளுக்கு அரசாங்கம் மலிவான மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிட்டாக்ளிப்டின் என்ற நீரிழிவு மருந்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மருந்தின் 10 மாத்திரைகள் ரூ.60க்கு வழங்கப்படும். இந்த மருந்து, நாட்டின் பொதுவான மருந்துக் கடைகளான ஜன் ஔஷதி கேந்திராக்களில் விற்கப்படும். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் அதன் ஜன் ஔஷதி கேந்திராக்களில் சிட்டாக்ளிப்டின் புதிய கலவையை சேர்த்துள்ளது.
சிட்டாக்ளிப்டின் என்றால் என்ன?
சிட்டாக்ளிப்டின் என்பது இரத்த சர்க்கரையை குறைக்கும் மருந்து. இது க்ளிப்டின்கள் எனப்படும் பிரிவில் முதலில் இருந்தது, அங்கு டி.பி.பி-4 என்ற புரதம் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் இது வளர்சிதை மாற்ற அமைப்பை பாதிக்கிறது, இதனால் கணையம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் இரத்தத்தில் சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் தூண்டுகிறது.
சிட்டாக்ளிப்டின் விலை என்ன?
சிட்டாக்ளிப்டின் 50 எம்ஜி இன் 10 மாத்திரைகளின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.60 ஆகும். அதேபோல் 100 எம்ஜி மாத்திரைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை 100 ரூபாய் ஆகும். மற்ற பிராண்டட் மருந்துகளின் விலையை விட இந்த மருந்தின் விலை 60 முதல் 70 சதவீதம் குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் நீரிழிவு மருந்துகளின் விலை ரூ.160 முதல் ரூ.258 வரை உள்ளது. இதற்கிடையில் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8,700க்கும் மேற்பட்ட பிரதான் மந்திரி பாரதிய ஜனுஷதி கேந்திராக்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை
தற்போது, 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் 250 அறுவை சிகிச்சை கருவிகள் ஜன் ஔஷதி கேந்திராவில் உள்ளன. இந்த மையங்களில் சானிட்டரி பேட்களும் 1 ரூபாய் என்கிற விலையில் கிடைக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-இந்தியாவின் கருத்துப்படி, நாடு முழுவதும் மொத்தம் 7.40 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், எட்டு கோடி பேர் ப்ரீ டயாபெட்டிக் ஆவார்கள். ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, நீரிழிவு நோய்க்கு முந்தைய நோயாளிகள் விரைவாக நீரிழிவு நோயாக மாறுகிறார்கள்.
நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும்
ஆய்வின் ஆசிரியர் டாக்டர் வி மோகன் கருத்துப்படி, 2045 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 135 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வரும் 20 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும்.
நீரிழிவு நோய்க்கான காரணம்
அதிக கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்வதே இதற்கு முக்கிய காரணம். ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாகும்போது சர்க்கரை நோய் பிரச்னை ஏற்படுகிறது. இதை சமநிலைப்படுத்த, கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இன்சுலின் குளுக்கோஸை பராமரிக்க வேலை செய்கிறது. ஆனால் கணையத்தில் இருந்து இன்சுலின் சரியாக வெளியேறாதபோது, சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேபோல் நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு ஆகும். டைப் 1 நீரிழிவு நோயில், கணையத்தால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது. அதே நேரத்தில், டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்கிறது.