பெங்களூரு: கன்னடப் படவுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப். தற்போது அவர்கள் இணைந்து நடித்துள்ள படம், ‘கப்ஜா’. இது கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாளம், ஒரியா ஆகிய 7 மொழிகளில் திரைக்கு வருகிறது. கேங்ஸ்டர் வித் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் சார்பில் ஆர்.சந்திரசேகர் தயாரித்து இருக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரேயா, முரளி சர்மா, ஜான் கொக்கேன், நவாப்ஷா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, கோட்டா சீனிவாசராவ், கபீர் துஹான் சிங்,
பொம்மன் இரானி, சுதா, தேவ் கில், காமராஜ் நடிக்க, ஏ.ஜெ.ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘கேஜிஎஃப்’ முதல் பாகம் மற்றும் 2ம் பாகத்தின் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். ரவிவர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் ஆகியோர் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் ஆர்.சந்துரு கூறியதாவது: 1947ல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் மிகக் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவரது மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள் கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படத்தின் டைட்டிலுடன் ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ டேக்லைன் இடம்பெறுகிறது. அதாவது, இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் பலர் தோன்றியதைப் பற்றியும் படத்தில் பேசியிருக்கிறோம். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது. நேற்று உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.