அதிகரிக்கும் ‘Ghost Jobs’.. கடுப்பாகும் ஊழியர்கள்..!

ரெசிஷன் எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பாவில் தான், இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என நினைக்கும் வேளையில் வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது அதிகப்படியான Ghost Jobs உருவாகியுள்ளது.

உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் வேளையில் பெரிய நிறுவனங்கள் பொருளாதாரச் சரிவில் ஏற்படும் வர்த்தகச் சரிவை சமாளிக்க அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.

இதேபோன்ற நிலை இந்தியாவிலும் உருவாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒன்று தான் Ghost Jobs, ஆனால் இதில் மக்கள் கடுப்பாகி வருகின்றனர்.

உலகை மிரட்டும் ‘ரெசிஷன்’.. உலக வங்கி சொல்வது என்ன..? மக்களை உஷார்..!

வேலைவாய்ப்பு தேடுதல் தளம்

வேலைவாய்ப்பு தேடுதல் தளம்

நாக்ரி, லின்கிடுஇன் என எந்த வேலைவாய்ப்பு தேடுதல் தளத்தைத் திறந்தாலும் காலியாக இருக்கும் வேலைவாய்ப்பு பட்டியல் மிகவும் அதிகமாக உள்ளது, அப்ளை செய்தால் 99 சதவீத நிறுவனத்திடம் இருந்து பதில் வருவதில்லை. இதுதான் தற்போது பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான விஷயமாக உள்ளது. பின் எப்படி அதிகப்படியான வேலைவாய்ப்புப் பதிவுகள் வருகிறது..?

பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

இந்தியாவில் ஒருபக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகள் குறைந்துள்ளது, விலைவாசி உயர்வால் வர்த்தகம் குறைந்துள்ளது, டிஜிட்டல் விளம்பரங்களின் வர்த்தகமும் குறைந்துள்ளது. இப்படியிருக்கும் வேளையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும், தேவையும் குறைந்து வருகிறது. இதனால் சந்தையில் உண்மையான காலி வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

திறன் வாய்ந்த ஊழியர்கள்
 

திறன் வாய்ந்த ஊழியர்கள்

இதேவேளையில் பல துறையில் புதிய திறன் வாய்ந்த ஊழியர்களைத் தேர்வு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையும் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த Ghost jobs பிரச்சனை புதிய வேலையைத் தேடுபவர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உள்ளது.

Ghost வேலைவாய்ப்புகள்

Ghost வேலைவாய்ப்புகள்

இதுபோன்ற போலியாக, வெறுமென முதலீட்டாளர்களைக் கவரவும், சக போட்டியாளர்களைக் குழப்பவும், ஊழியர்களைத் தொடர்ந்து விழிப்புடன் வைக்கவும் இத்தகையைப் போலியான Ghost வேலைவாய்ப்புகள் பதிவுகள் செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இது இன்று நேற்று வந்தது இல்லை பல ஆண்டுகளாக இருப்பது தான், ஆனால் பிரச்சனை என்னவென்றால் இதன் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது தான். இதனால் உண்மையாகவும், சீரியஸ் ஆகவும் வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களும் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.

உண்மை நிலவரம்

உண்மை நிலவரம்

சுமார் 1000 hiring managers-களிடம் செய்யப்பட்ட ஆய்வில் 40 சதவீத நிறுவனங்கள் ஓரே வேலைவாய்ப்பை 2- 3 மாதங்களாகத் திறந்து வைத்துள்ளது, 5 ல் ஒரு hiring manager 2023 வரையில் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

50 சதவீதம் பேர் காலியான வேலைவாய்ப்பு இல்லை என்றாலும் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் பதிவுகளைச் செய்ய நிர்வாகம் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர் என Clarify Capital ஆய்வுகள் கூறுகிறது. இந்த நிலை உலகம் முழுவதும் இருப்பது மோசமான விஷயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ghost Jobs posting were increased; Companies not posting real jobs; New problem for job seekers

Ghost Jobs posting in job portal were increased like never before. Companies not posting real job openings, will be a New problem for job seekers

Story first published: Monday, September 19, 2022, 12:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.