புதுடில்லி: தீமையை ஒழிக்க கிருஷ்ணரை அனுப்பியது போல, ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளில் இருந்தும், அரசியலைமைப்பையும் நாட்டையும் பாதுகாக்க கடவுள் ஆம் ஆத்மி கட்சியை படைத்திருக்கிறார் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசிய கூட்டம் நடந்தது. குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், 20 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: பத்து வருடங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும் போது, இந்த இந்திராகாந்தி மைதானமே நிரம்பும் அளவிற்கு கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கவில்லை. தீமைகளை அழிக்க கிருஷ்ணர் அனுப்பப்பட்டது போல, ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, போன்றவைகளில் இருந்தும், அரசியலமைப்பு மற்றும் நாட்டை தீமைகளிடமிருந்து காப்பாற்றவும் கடவுள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கியுள்ளார்.
கடந்த 1949, நவ.25-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்க்கொள்ளப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக காங்கிரஸூம் பாஜவும் நாட்டை சீரழித்து உள்ளன. அதனால், கடவுள் தலையிட்டு 2012ல் நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சியை படைத்தார். இது தற்செயலான நிகழ்வு இல்லை. கடவுள் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதனை மனதில் வைத்து வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் நேர்மை மற்றும் கொள்கைகளை பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குஜராத் அரசுக்கு 3.5லட்சம் கோடி கடன் உள்ளது. எந்த இலவசங்களையும் கொடுக்காத குஜராத்திற்கு என் அவ்வளவு கடன் வந்தது. ஆம் ஆத்தி எம்எல்ஏ.,க்களும் விடுதலைப் போராட்ட வீரர்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement