ஆண்டாள் கோயில் யானையை அசாம் வன அதிகாரிகள் ஆய்வு

திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, அசாம் மாநிலத்திலிருந்து கடந்த 2011ல் பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என பெயரிட்டு, கோயில் யானை மண்டபத்தில் வளர்த்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, 2 பாகன்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது புதிய பாகன்கள் யானையை பராமரித்து வருகின்றனர். இந்த யானை தாக்கப்படுவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாவதால், தமிழக அரசு சார்பில் சிறப்புக்குழு அமைத்து ஆய்வு செய்தனர்.

இதில், யானை நலமுடன் இருப்பதாக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதனிடையே, யானை அசாமிலிருந்து கொண்டு வரப்பட்டதால், அம்மாநில வன பாதுகாவலர், அசாம் உயர்நீதிமன்றத்தில் யானையை மீண்டும் அங்கு கொண்டு வர வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.  இதையடுத்து அசாம் வன பாதுகாவலர் ஹித்தேஷ்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வனஉயிரின பேராசிரியர் கே.கே.ஷர்மா, ரூப்ஜித் காகாதீ மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணை வனபாதுகாவலர் டாக்டர் நாகநாதன் உள்ளிட்ட சிறப்பு குழுவினர் நேற்று யானையை ஆய்வு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.