அயோத்யா :உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முழு உருவச் சிலையுடன் கட்டப்பட்டுள்ள கோவிலில், தினமும் பூஜை மற்றும் பாராயணங்கள் நடத்தப்படுகின்றனஉத்தர பிரதேசத்தில் அயோத்தி நகரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ள பாரத்குண்ட் என்ற கிராமத்தில் வசிப்பவர் பிரபாகர் மவுரியா. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ஆதரவாளர்.சமூக வலைதளமான ‘யு — டியூப்’ சேனலில் பக்திப் பாடல்கள், பஜனைகள் பாடி, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்களால் கவரப்பட்ட பிரபாகர், பாரத்குண்ட் கிராமத்தில், -பிரயாக்ராஜ் – பைசாபாத் நெடுஞ்சாலையில் அவருக்கு ஒரு கோவில் கட்டியுள்ளார்.இதில் ஆதித்யநாத்தின் முழு உருவச்சிலை காவி உடையுடன் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிலைக்கு பிரபாகர் தினமும் பூஜை, பாராயணம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார். இந்தக் கோவிலுக்கு சிலர் தினமும் வந்து ஆதித்யநாத்தை வணங்கிச் செல்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement