இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று முன்தினம் (செப். 18) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு வெளியே இருந்த கொடியை எதிர் தரப்பினர் அகற்றியது தொடர்பாக இந்த கலவரம் ஏற்பட்டதாக லெய்செஸ்டர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கலவரத்திற்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள சில வீடியோக்களில், இந்து அமைப்பை சேர்ந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புகின்றனர். மேலும், அவர்கள் கோயில் தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பொருள்களையும் அடித்து உடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்
Islamist mob vandalises Hindu temple in Leicester in full public view as police watch on.
Looks like Pakistani grooming gangs have found a new hobby to keep themselves engaged while their friends in the Labour Party gear up to justify this bigotry for the good of diversity. pic.twitter.com/NZV9RBqm40
— Sonam Mahajan (@AsYouNotWish) September 18, 2022
இருதரப்பினர் இடையேயும் காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிகிறது. மேலும், வடக்கு லெய்செஸ்டர் பகுதியில் காவலை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, இதுபோன்ற வன்முறை சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.
இதனையடுத்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்து கோயில் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”இந்த சம்பவம் குறித்து, நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடுமையான முறையில் எடுத்துக் கூறியுள்ளோம். இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Press Release: High Commission of India, London condemns the violence in Leicester. @MIB_India pic.twitter.com/acrW3kHsTl
— India in the UK (@HCI_London) September 19, 2022
இதே லெய்செஸ்டர் பகுதியில், கடந்த ஆக.28ஆம் தேதி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியொட்டி ஏற்பட்ட மோதல் குறித்த காணொலிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மகாராணி எலிசபெத் இறுதிசடங்கு : சாதாரண உடையில் இளவரசர் ஹாரி – ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ