இந்தியாவில் ஹைட்ரஜனில் இயங்குவது எப்போது? ரயில்வே அமைச்சர் தகவல்

உலகிலேயே முதல் முறையாக ஜெர்மனி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்றும் இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்றும் ஜெர்மனி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி?

 இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்

இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை இந்தியா உருவாக்கி வருவதாகவும், அவை 2023ஆம் ஆண்டு தயாராகும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜனை ரயில் எரிபொருளாக பயன்படுத்துவதால், பூஜ்ஜிய கார்பன் இலக்குகளை ஆதரிப்பது உட்பட பல நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில்

ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில்

இதுவரை ஜெர்மனி மட்டுமே ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு ஜெர்மனி உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்தியது. பிரெஞ்சு நிறுவனமான Alstom ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 14 ரயில்களை சுமார் $92 மில்லியன் செலவில் உருவாக்கி ஜெர்மனிக்கு அளித்துள்ளது.

ரயில் எரிபொருள்
 

ரயில் எரிபொருள்

இந்த நிலையில் புவனேஸ்வரில் உள்ள SOA பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியன் இரயில்வே, ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் டீசல் ரயில்களுக்கு பதில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து ஜெர்மனியை அடுத்து ஹைட்ரஜன் எரிபொருளை வைத்து ரயிலை இயக்கும் நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

மேலும் இந்த விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமானது என்றும், இது உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ரயில்கள் சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக இயங்கியது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

வேகம்

வேகம்

வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் 52 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டியது என்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

In 2023, India ready for Hydrogen-powered trains says Railway minister

In 2023, India ready for Hydrogen-powered trains says Railway minister

Story first published: Monday, September 19, 2022, 8:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.