ரயில்வே பாதுகாப்பு படை (செக்யூரிட்டி படை) உருவாக்கப்பட்ட போது பணி விதிகள், ஆயுதங்கள் இல்லாததால் அவர்களால் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
இதனால் 1985 செப்.,20ல் ‘செக்யூரிட்டி படை’, ‘ரயில்வே பாதுகாப்பு படை’யாக மாற்றப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இதில் 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையகம் டில்லி. 18 மண்டலங்கள் உள்ளன. 2019 டிசம்பரில் ஆர்.பி.எப்., என்பது இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஐ.ஆர்.பி.எப்.,) என பெயர் மாற்றப்பட்டது. அதிகாரங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் டி.ஜி.பி., தலைமையில் பாதுகாப்பு படை இயங்குகிறது;
இந்த படைக்கு ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு லக்னோ ஜகஜீவன்ராம் ரயில்வே பாதுகாப்புபடை பயிற்சி பள்ளி மூலம் ஆரம்ப கட்ட, புதுமுக, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தற்போது 65 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement