மகாராணியின் 8 பேரக்குழந்தைகளில் மிகவும் மனமுடைந்த நிலையில் வேதனையுடன் இறுதி மரியாதை செய்துள்ளார் இளவரசர் ஹரி.
இராணுவ சீருடையில் தனது பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டாலும் இளவரசர் ஹரி ஒருவகையில் அவமானபடுத்தபட்டுள்ளார்.
சனிக்கிழமை மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அவரது எட்டு பேரக்குழந்தைகளும் பிரித்தானிய அரச குடும்ப பரம்பரியப்படி இறுதி மரியாதையாக சவப்பெட்டியைச் சுற்றி காவல் நின்று (Vigil) தங்கள் கடமையை செய்தனர்.
இந்த நடைமுறையின்போது, இராணுவத்தில் பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி இருவரும் தங்கள் இராணுவ சீருடையில் ராணிக்கு தங்கள் கடமையை செய்தனர். இந்த இருவரைத் தவிர மற்ற 6 பேரப்பிள்ளைகளும் துவக்க அனுசரிப்பிற்க்கான கருப்பு உடையில் பங்கேற்றனர்.
அரச பொறுப்பிலிருந்து விலகியதால் இளவரசர் ஹரி இராணுவ சீருடை அணிய அனுமதி மறுக்கப்பட்டாலும், ராணியின் இறுதிச் சடங்கின் ஒரு பகுதிக்காக அவர் சீருடையை அணிய, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுமதி அளித்தார். அவர் புதன்கிழமை (செப்டம்பர் 14) பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ராணியின் சவ ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல சாதாரணமாக கருப்பு நிற துக்க உடையே அணிந்திருந்தார்.
ஆனால் இராணுவ சீருடை அணிந்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டாலும் இளவரசர் ஹரிக்கு மட்டும் அதிலும் ஒரு அவமானம் ஏற்பட்டுள்ளது. அவரது உடையில் மட்டும் மகாராணியின் முத்திரையான ‘ER’ அகற்றப்பட்டிருந்தது. இதனால், இளவரசர் ஹரி மனமுடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன் இறுதிச்சடங்கு இப்படி இருக்கக்கூடாது என்று முன்பே விருப்பத்தை தெரிவித்த ராணி எலிசபெத்!
அதுவே, இளவரசர் வில்லியமின் சீருடையில் தோள்பட்டையில் ‘ER’ இருந்தது. அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமை இதேபோல் காவல் நின்ற ராணியின் வாரிசுகளான புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே ஆகியோறது சீருடைகளிலும் இந்த முத்திரை காணப்பட்டது.
Jack Hill/WPA Pool/Shutterstock
இந்நிலையில், இளவரசர் ஹரிக்கு இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும், அவர் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹரியும் மேகன் மார்க்கலும் சந்தித்தது எப்படி? சசெக்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் காதல் கதை
திங்கட்கிழமை (செப்டம்பர் 19) ராணியின் இறுதிச் சடங்குகள் உட்பட பிற அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு அவர் சிவில் உடையில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு அவர் பொறுப்புகளை துறந்த பிறகு இந்த இராணுவ சீருடையை முதல் முறையாக தனது பாட்டியின் இறுதிச்சடங்கிற்காக அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்.