ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையை பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதோடு மூலதன வரத்தானது அதிகரிக்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியா 5 ட்ரில்லிடன் டாலர் என்ற இலக்கினை எட்ட ,அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு 8 – 9% வளர்ச்சி காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கி வரும் டாப் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. முதலீடுகள் என்ன தான் ஆகின்றன?
பொருளாதார வளர்ச்சி?
நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 7% வளர்ச்சியினை எட்டினால் நான் மகிழ்ச்சி அடைவேன். தற்போது நிலவி வரும் கொள்கை நிலைப்பாடு என்பது தொடர வேண்டும். வளர்ந்த நாடுகள் தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. இது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன் என கூறியுள்ளார்.
ரூபாய் கடும் சரிவு
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகித உயர்வை தொடர்ந்து வருகின்றது.
இதற்கிடையில் ரூபாய் குறித்து கூறியவர், இந்திய சந்தையில் இருந்து கடுமையான அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், ரூபாய் மதிப்பானது 79 – 80 ரூபாய் என்ற மோசமான லெவலுக்கு மத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது.
முதலீடுகள் வரத்து?
தற்போது இந்திய சந்தையில் மூலதனம் திரும்பி வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது வலுவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது என கூறுகிறார்.
முதலீடு அதிகரிக்க வேண்டும்
பல மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22,000 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சி விகிதம் சரிந்துள்ள இந்த நேரத்தில் 27 – 28% ஆக சரிந்துள்ள முதலீட்டு விகிதம் 33% ஆக உயர வேண்டும் என ரங்கராஜன் விளக்கமளித்துள்ளார்.
தனியார் முதலீடு
தனியார் முதலீடும் அதிகரிக்க வேண்டும். மின்சாரம், விவசாயம் சந்தை படுத்தல் போன்ற பலவேறு துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உறவில் நல்லிணக்கம் இருக்க வேண்டும். 1990களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டவை என்றும் கூறினார்.
சவால் என்ன?
புதிய தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் பெரும் சவாலாக உள்ளது. ஆக அதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மின்சார வாகனங்களுக்கு மாறுவது பயனளிக்கும் ஒரு விஷயமாகும். இது புதை வடிவ எரிபொருளை குறைக்க வழிவகுக்கும். எனினும் மூலதனங்களை நாடு இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். மேலும் வேலை வாய்ப்பிலும் இது பெரும் தாக்கதினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
Former RBI Governor Rangarajan opined that the interest rate should continue to increase
Former RBI Governor Rangarajan opined that the interest rate should continue to increase/உங்க பாக்கெட் காலியாவது உறுதி.. ஆர்பிஐ முன்னாள் கவர்னர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!