உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் எங்கு அதிகம்? மக்கள் வாழ்வதற்கு இந்த நாடுகள் ஏற்றதா? இதுபோன்ற நாடுகளில் விலை வாசி எவ்வளவு? ஏற்கனவே கொரோனாவினால் செலவுகள் அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுக்க பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் அதிக செலவினங்கள் மிக்க நாடுகளில் வாடகை விகிதங்கள் எப்படி இருக்கின்றன. குரோசரீஸ் இன்டெக்ஸ் எவ்வளவு? உணவகங்களின் விலை நிலவரம் எவ்வளவு? மக்களின் வாங்கும் திறன் எவ்வளவு?
இது குறித்தான Numbeo-வின் தரவரிசை பட்டியலை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?
பெர்முடா?
உலகின் காஸ்ட்லியான நகரங்களில் முதலிடத்தில் இருப்பது பெர்முடாவாகும். இதன் இன்டெக்ஸ் 142 புள்ளிகளை கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாடகை விகிதமானது 98.96 ஆகவும், மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 121.39 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 142.62 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 144.74 ஆகவும், உள் நாட்டு மக்களின் வாங்கும் திறன் 82.32 ஆகவும் உள்ளது.
சுவிட்சர்லாந்து
இரண்டாவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் இன்டெக்ஸ் 110.34 ஆக உள்ளது. இங்கு வாடகை விகிதம் 50.21 ஆகும். இங்கு வாடகை விகிதமானது 50.21 ஆகவும், மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 81.73 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 113.35 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 104.30 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 116. 19 ஆகவும் உள்ளது. பெர்முடாவை விட சுவிட்சர்லாந்தில் மக்களின் வாங்கும் திறன் ஆனது அதிகமாக உள்ளது.
பஹாமாஸ்
டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பஹாமாஸ் 88.27 புள்ளிகளை பெற்றுள்ளது. இங்கு வாடகை விகிதமானது 38.41 ஆக உள்ளது. மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 64.55 ஆக உள்ளது. இதே குரோசரிஸ் விலை விகிதம் 71.92 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 94.29 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 44.22 புள்ளிகளாகவும் உள்ளது.
பார்படாஸ்
இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பார்படாஸ், 87.07 என்ற விகிதத்தினை பெற்றுள்ளது. இங்கு வாடகை விகிதமானது 21.16 ஆக உள்ளது. மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 55.71 ஆக உள்ளது. இதே குரோசரிஸ் விலை விகிதம் 81.73 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 74.50 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 32.62 புள்ளிகளாகவும் உள்ளது.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்தின் செலவின விகிதம் 86.59 என்ற லெவலில் உள்ளது. இந்த நாடு டாப் 10 பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இங்கு வாடகை விகிதமானது 35.81 ஆக உள்ளது. மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 62.43 ஆக உள்ளது. இதே குரோசரிஸ் விலை விகிதம் 82.44 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 88.64 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 82.62 புள்ளிகளாகவும் உள்ளது.
நார்வே
நார்வே-க்கான குறியீடானது 85.93 ஆக உள்ளது. இங்கு வாடகை விகிதமானது 30.55 ஆக உள்ளது. மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 59.59 ஆக உள்ளது. இதே குரோசரிஸ் விலை விகிதம் 81.31 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 81.31 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 87.59 புள்ளிகளாகவும் உள்ளது.
ஜெர்சி
இந்த காஸ்ட் ஆப் லிவ்விங் பட்டியலில் 7வது இடத்தில் ஜெர்சி உள்ளது.
இங்கு மக்கள் வாழ்வதற்கான செலவினங்கள் இன்டெக்ஸ் ஆனது 80.38 ஆக உள்ளது. இங்கு வாடகை விகிதம் 55.37 ஆகும். மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 68.48 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 64.52 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 89.23 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 68.42 ஆகவும் உள்ளது.
சிங்கப்பூர்
எட்டாவது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் விகிதமானது 79.09 ஆகும். இங்கு வாடகை விகிதம் 55.37 ஆகும். மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 68.48 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 64.52 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 89.23 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 68.42 ஆகவும் உள்ளது.
இஸ்ரேல்
9வது இடத்தில் உள்ள இஸ்ரேலில் இன்டெக்ஸ் விகிதமானது77.28 ஆகும். இங்கு வாடகை விகிதம் 32.95 ஆகும். மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 56.19 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 66.45 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 83.92 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 73.54 ஆகவும் உள்ளது.
ஹாங்காங்
10 இடத்தில் உள்ள ஹாங்காங்கின் இன்டெக்ஸ் விகிதம் 76.55 ஆகும்.
இங்கு வாடகை விகிதம் 67.99 ஆகும். மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 72.48 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 82.51 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 53.23 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 66.93 ஆகவும் உள்ளது.
இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்த பட்டியலில் இந்தியா 135 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின்
இன்டெக்ஸ் விகிதம் 23.89 ஆகும். இங்கு வாடகை விகிதம் 6.15 ஆகும். மக்கள் வாழ்வாதார செலவினமும், வாடகை வீதமும் சேர்த்து 15.45 ஆகவும், குரோசரிஸ் விலைகள் 25.56 ஆகவும், உணவகங்களில் விலை வீதம் 16.44 ஆகவும், உள்நாட்டு மக்களின் வாங்கும் திறன் 76.44 ஆகவும் உள்ளது.
cost of living index 2022: Which is the costliest country for people to live in?
cost of living index 2022: Which is the costliest country for people to live in?/உலகின் காஸ்ட்லி நாடுகள் எது.. மக்கள் வாழ்வதற்கு எது சிறந்தது.. லிஸ்டில் இந்தியாவுக்கு எந்த இடம்?