வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே பங்கு தான் உலகின் மிக விலையுயர்ந்த பங்காக உள்ளது.
பெர்க்ஷயர் ஹாத்வே கார்ப்பரேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மறுகாப்பீடு, பயன்பாடுகள், எரிசக்தி, சரக்கு ரயில் போக்குவரத்து, உற்பத்தி, சில்லறை வணிகம் மற்றும் சேவைகள் உட்படப் பல துறைகளில் பணியாற்றி வருகிறது.
நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) பட்டியலிடப்பட்ட பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகள் BRK.A மற்றும் BRK.B என்ற இரு பெயர்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
உலகின் 7வது பணக்காரருக்கு இன்று பிறந்த நாள்.. வாரன் பஃபெட் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் சில!
பெர்க்ஷயர் ஹாத்வே
பெர்க்ஷயர் ஹாத்வே கிளாஸ் ஏ பிரிவின் ஒரு பங்கு சுமார் 4,14,000 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யும்போது பெர்க்ஷயர் ஹாத்வே கிளாஸ் பி பங்கு விலை சுமார் $275 ஆக உள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே ஸ்டாக் ஸ்பிலிட் செய்ய எவ்விதமான திட்டமும் இல்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் உலகின் மிக விலையுயர்ந்த பங்குகள் என்ற இடத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
கிளாஸ் ஏ & பி பங்குகள்
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் BRK.A பங்குகளின் விலை கடந்த 52 வாரங்களில் குறைந்த அளவு என்றால் 396,500 டாலர், அதேபோல் அதிகப்படியான விலை என்றால் 544,389 டாலர்ஆகும். கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி பங்குகளுக்கு இடையே, நிர்வாகக் குழுவில் வாக்களிக்கும் உரிமையின் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளது.
4,14,000 டாலர்
பங்குசந்தை முதலீட்டை பொருத்தவரையில் விலையுயர்ந்த பங்காக இருப்பது அவசியமில்லை, ஆனால் ஒரு நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக இருப்பது அவசியம். அப்படிப் பார்க்கும் போது Berkshire Hathaway (BRK.A) பங்கு மிகவும் விலையுயர்ந்த பங்காக இருப்பதால், ஒரு பங்கை வாங்குவதற்கு, ஒருவர் 4,14,000 டாலர் செலவு செய்ய வேண்டும்.
பெரிய முதலீட்டாளர்கள்
இதேவேளையில் விலை அதிகமாகக் கொண்ட பங்குகள், அதேபோல் நிலையான வருமானத்தை அளிக்கும் பங்குகளில் பெரிய அளவிலான தடுமாற்றம் இருக்காது. காரணம் பெரிய முதலீட்டாளர்கள் தான் அதிகத் தொகையை முதலீடு செய்து அதிகப் பங்குகளை வாங்குவார்கள்.
நீண்ட கால முதலீடுகள்
இத்தகையைப் பிரிவு முதலீட்டாளர்கள் தேவையில்லாமல் சிறு லாபத்திற்காகப் பங்குகளை விற்பனை செய்யும் பெரும்பாலான ரீடைல் முதலீட்டாளர்கள் பட்டியலில் வர மாட்டார்கள். இதனால் பங்கு விலை தடுமாற்றம் குறையும், நீண்ட கால முதலீடுகள் அதிகரிக்கும்.
Most expensive stock in the world
Do you know Most expensive stock in the world