தொடர்ந்து கடந்த வாரத்தின் இறுதியில் இருந்தே இந்திய பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், வாரத் தொடக்க நாளான இன்றும் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில், தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
இதற்கிடையில் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்த போக்கு இன்றும், இனி வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக சந்தையில் வீழ்ச்சியானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1100 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் கெயினர், டாப் லூசர்ஸ் யார்?
ரூபாய் நிலவரம் என்ன?
இந்திய ரூபாயின் மதிப்பானது 79.67 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 79.74 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது மேலும் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து முதலீடுகள் வெளியேறும் பட்சத்தில், தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் சரிவிலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 181.67 புள்ளிகள் குறைந்து, 58,659.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 54.90 புள்ளிகள் குறைந்து, 17,475 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 90.07 புள்ளிகள் அதிகரித்து, 58,849.86 புள்ளிகளாகவும், நிஃப்டி 20.40 புள்ளிகள் அதிகரித்து, 17,551.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 887 பங்குகள் ஏற்றத்திலும், 567 பங்குகள் சரிவிலும், 138 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
அன்னிய முதலீடு நிலவரம்?
தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில், என் எஸ் இ தரவின் படி செப்டம்பர் 16 அன்று, 3260.05 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் விற்பனை செய்யப்பட்டு வெளியேறியது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 36.87 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நிகராக வாங்கியுள்ளனர். இந்த போக்கு இன்றும் தொடரலாம் என எதிரொபார்க்கப்படுகிறது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் அனைத்து குறியீடுகளும் 1 % கீழாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள எம் & எம், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், பஜாஜ் பின்செர்வ், இந்தஸ் இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது 10.21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 333.69 புள்ளிகள் அதிகரித்து, 59,174.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி105.85 புள்ளிகள் அதிகரித்து, 17,636.70 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. மீண்டும் சென்செக்ஸ் 59,000 புள்ளிகளுக்கு மேலாக காணப்படுகின்றது.
What is the situation of Sensex, Nifty? Why this fluctuation?
What is the situation of Sensex, Nifty? Why this fluctuation?/உஷாரா இருங்க..காளையா கரடியா மோதலில் இந்திய பங்கு சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் ?