எடப்பாடியை கூப்பிட்ட மோடி: கட்டிப்பிடிக்கவா? குட்டு வைக்கவா?

அதிமுகவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஒற்றை தலைமை விவகாரத்தால் உட்கட்சி பிரச்சினை நிலவி வருகிறது. தமிழக பாஜக இதில் பெரிதாக தலையிடாதது போல் காட்டிக் கொள்கிறது. ஆனாலும், டெல்லி மேலிடம் அதிமுகவில் நடக்கும் பஞ்சாயத்துக்களை உற்று கவனித்தே வருகிறது. இந்த நிலையில்,

இன்றிரவு டெல்லி செல்லவுள்ளார். அவருடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் செல்லவுள்ளனர்.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கமாக ஒரு மாதத்தில் கட்சிகளின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் தேர்தல் ஆணையம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பின்னால்

தரப்பினர் இருப்பதாக இபிஎஸ் தரப்பு நம்புகிறது. இதனிடையே, பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு சாதகமாக அமையாததால், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதேசமயம், தங்கள் தரப்பு பதிலை கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தையே கைகாட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி பாஜக மேலிடம் தெம்பூட்டியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல் இபிஎஸ்ஸுக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே, டெல்லி பயணத்தின்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று மனு அளித்து முறையிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அத்துடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாகவும், இதற்காக பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பலமுறை பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி சென்ற இபிஎஸ், எப்படியும் மோடியை சந்தித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், வெறும் 2 நிமிடங்களே அதுவும் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் சந்தித்து விட்டு மோடி சென்று விட்டார். இதனால், எடப்பாடி பழனிசாமி அப்செட்டானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதனால், உற்சாகமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ள இபிஎஸ்ஸுக்கு, டெல்லியில் இருந்து வந்துள்ள க்ரீன் சிக்னல் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, “ஒட்டு மொத்த அதிமுகவும் தனது கட்டுப்பாட்டில் உள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன் பக்கம் இருக்கின்றனர். ஒற்றைத் தலைமையாக தொண்டர்கள் முழுமையாக தன்னை ஏற்றுக் கொண்டுள்ளனர்.” என அழுத்தம் திருத்தமாக டெல்லி பாஜக மேலிடத்திடம் எடப்பாடி பழனிசாமி சொல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேசவிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பற்றியும், பிரதமர் மோடியுடனான சந்திப்பு பற்றியும் டெல்லி வட்டாரங்களிடம் கேட்டபோது, “எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் பாஜகவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டது. சசிகலா, டிடிவிவை இணைக்க முதலில் மறுப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக மேலிடத்தை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறது. தனது விருப்பத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை பாஜக சொல்லிப் பார்த்தாலும், தனது முடிவில் இபிஎஸ் விடாப்படியாக இருப்பது டெல்லி மேலிடத்தை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே இபிஎஸ்ஸை சந்திக்க பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இபிஎஸ் வருப்பப்படி அவரது தலைமையிலான ஒற்றை அதிமுக தலைமையை பாஜக ரசிக்காது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற திட்டத்தோடு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி என யார் வந்தாலும் டெல்லி பாஜக அதனை அனுமதிக்காது. ஏனெனில், நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதையொட்டி அதிமுகவின் வாக்குகள் சிதறுவதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. எனவே, ஒன்றிணைந்து செல்லுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி நேரடியாக அறிவுறுத்தவே வாய்ப்புள்ளது.” என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.