ஓலா சாஃப்ட்வேர் குழுக்களில் இருந்து 500 ஊழியர்கள் டிஸ்மிஸ்..? காரணம் என்ன?

ஓலா நிறுவனம் அதன் மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓலா (OLA) நிறுவனம் அதன் செயலி (Application) தொடர்பான மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மின்சார ஸ்கூட்டரான ஓலா எஸ் 1 ப்ரோவின் விற்பனை குறைந்ததை அடுத்து இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ola layoffs: Ola likely to lay off up to 500 employees in cost-cutting  exercise, HR News, ETHRWorld
இந்த பணி நீக்க செயல்முறைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அந்நிறுவனத்தின் மறுசீரமைப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஓலா கார்கள் மற்றும் ஓலாவின் வர்த்தக நிறுவனமான ஓலா டாஷ் ( Ola Dash) ஆகியவற்றில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Ola electric scooters: price, how to buy, delivery – all you need to know  about the sleek new electric scooter | GQ India
தொழில்நுட்பத் துறை (Information Technology Sector) கடினமான காலத்தை கடந்து வருகிறது. நெட்ஃபிக்ஸ், மைக்ரோசாப்ட் மற்றும் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. கூகுள் தனது ஊழியர்களை அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருக்குமாறும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகுமாறும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.