டொரொன்டோ, :கனடாவில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாபை சேர்ந்தவர் சத்விந்தர் சிங், 28. இந்தியாவில் எம்.பி.ஏ., படித்த இவர், மேல்படிப்புக்காக வட அமெரிக்க நாடான கனடா சென்றார். அங்கு படித்து வந்ததுடன், மில்டன் என்ற இடத்தில் உள்ள, ‘ஆட்டோமொபைல்’ நிறுவனத்தில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இந்த நிறுவனம் உள்ள இடத்தில் கடந்த 12ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில், சத்விந்தர் சிங் படுகாயம் அடைந்தார்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷகீல் அஷ்ரப், 38, மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆன்ட்ரூ ஹாங், 48, ஆகியோர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஷான் பெட்ரீ, 40, என்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சத்விந்தர் சிங், சிகிச்சை பலனின்றி 17ல் உயிரிழந்தார். இதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.சத்விந்தர் சிங் உடலை இந்தியா எடுத்து செல்லவும், அவரது குடும்பத்தினருக்கு உதவவும், ‘ஆன்லைன்’ வாயிலாக நிதி திரட்டப்பட்டது. நேற்று முன்தினம் வரை 28 லட்சம் ரூபாய்நன்கொடை கிடைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement