தற்கொலை செய்துகொண்ட ’வாய்தா’ திரைப்பட நடிகையின் செல்போன் மற்றும் வீட்டருகே உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் இறங்கி வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் மற்றும் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் மூலமாக தெரிந்துகொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை பவுலினின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடக்கூடிய சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
பவுலின் (எ) தீபா மரணத்திலும், பவுலினின் காதலன் சிராஜுதீனுடைய நண்பர் பிராபகரன் மீதும் சந்தேகம் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பவுலின் (எ) தீபா சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் துணை நடிகையாகவும், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ’வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பவுலின் கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகை பவுலின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கோயம்பேடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை பவுலின் உடல் அவரது உறவினர்களால் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நடிகை பவுலின் எழுதி வைத்த கடிதம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி கோயம்பேடு போலீசார் நடிகை பவுலின் காதலன் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நடிகை பவுலின் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் செல்போனில் காதலன் சிராஜுதீனிடம் வாக்குவாதம் செய்து, தற்கொலை செய்துகொள்ளபோவதாக பேசியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நடிகை பவுலின் குடியிருந்த வீட்டருகே உள்ள சி.சி.டி.வி பதிவுகளையும் கைப்பற்றியுள்ள கோயம்பேடு போலீசார் அவரது வீட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை பவுலின் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் சிராஜுதீன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிராகரன் நடிகை பவுலினின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடக்கூடிய சி.சி.டி.வி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
பவுலின் (எ) தீபா மரணத்திலும், பவுலினின் காதலன் சிராஜுதீனுடைய நண்பர் பிராபகரன் மீதும் சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நடிகை பவுலின் காதலன் சிராஜுதீன் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதாகவும், அவரை பவுலின் காதலித்து வந்த நிலையில், அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. உண்மையில் பவுலின் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்து – ஆனந்தன் ராமன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM